பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி தான் வெல்லுமாம்.. காங்., கூட்டணிக்கு அடுத்த அடி - கருத்து கணிப்பு
பாட்னா: பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் மீண்டும் பாஜக கூட்டணி தான் வென்று ஆட்சியை பிடிக்கும். அந்த கூட்டணிக்கு 131 முதல் 150 இடங்கள் வரை கிடைக்கும் என்று கருத்து கணிப்பு முடிவு தெரிவித்துள்ளது. அதேவேளையில் காங்கிரஸ் கூட்டணி 81 முதல் 103 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பில் முடிவின் முழு விவரங்கள் வருமாறு:
பீகாரில் தற்போது பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக செயல்பட்டு வருகிறார். இந்த கூட்டணியில் மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக்ஜன சக்தி (ராம்விலாஸ்), முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான ஜிதன் ராம் மஞ்சியின் எச்ஏஎம் எனும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிகளும் உள்ளன.

மறுபுறம் எதிர்க்கட்சிகள் மகாகத்பந்தன் என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடிஎனும் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் லிபரேஷன் - சிபிஐஎம்எல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் தான் பீகார் சட்டசபை தேர்தல் தொடர்பாக JVC என்ற அமைப்பு கருத்து கணிப்புகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த 1ம் தேதி முதல் கடந்த 25ம் தேதி வரை 243 தொகுதிகளிலும் இந்த கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 73,283 பேர் இந்த கருத்து கணிப்பில் பங்கேற்றனர். இந்த கருத்து கணிப்பின்படி மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பாஜக கூட்டணிக்கு மொத்தம் 131 முதல் 150 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பாஜக 66 முதல் 77 இடங்களிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 52 முதல் 58 தொகுதிகளிலும் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற கட்சிகள் 13 முதல் 15 தொகுதிகளை கைப்பற்றும். இந்த கூட்டணிக்கு 41 முதல் 45 சதவீத ஓட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாம்.
மறுமார்க்காக எதிர்க்கட்சிகளின் மகாகத் பந்தன் கூட்டண 81 முதல் 103 தொகுதிகளில் வெற்றி பெறும். அதிகபட்சமாக தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி கட்சி 57 முதல் 71 தொகுதிகளில் வெல்லும். காங்கிரஸ் 11 முதல் 14 இடங்களிலும், மற்றவர்கள் 13 முதல் 18 இடங்களிலும் வெல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணிக்கு 37 முதல் 4 0 சதவீதம் ஓட்டுகள் கிடைக்கலாமாம்.
இந்த 2 கூட்டணிகளை தவிர்த்து பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிசோரின் ஜன்சுராஜ் கட்சி 4 முதல் 6 தொகுதிகளை கைப்பற்றலாம். இதுதவிர ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி ம்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி உள்பட மற்றவர்கள் 5 முதல் 6 தொகுதிகளில் வெல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரை எடுத்து கொண்டால் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 122 தொகுதிகளில் வெல்ல வேண்டும். அந்த வகையில் பார்த்தால் பாஜக கூட்டணிக்கு மெஜாரிட்டிக்கு தேவையான 122 இடங்களை விட அதிக தொகுதிகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications