அரசு பணியில் பெண்களுக்கு 35 சதவீதம் இடஒதுக்கீடு.. சட்டசபை தேர்தலையொட்டி வெளியான முக்கிய அறிவிப்பு
பாட்னா: பீகாரில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 35 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பீகாரில் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி மற்றும் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சியின் மதசார்பற்ற ஹிந்துஸ்தானி அவா மோர்ச்சா (எச்ஏஎம்எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. முதல்வராக ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் செயல்பட்டு வருகிறார்.

வரும் அக்டோபர் அல்லது செப்டம்பர் மாதத்தில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தற்போதைய பாஜக கூட்டணி மீண்டும் அப்படியே களமிறங்குகிறது. அதேபோல் எதிர்க்கட்சிகளான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன.
இந்த தேர்தலையொட்டி பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பெண்களுக்காக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி மீண்டும் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் அனைத்து அரசு பணிகளில் பெண்களுக்கு 35 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications