யார் வந்தாலும் ஓகே.. மோடி வரவே கூடாது.. பாஜக கூட்டணியில் எழும் முக்கிய தலைவரின் கலகக் குரல்!
பிரதமர் மோடிக்கும் பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டு இருப்பதாக தேசிய அரசியலில் பேசிக்கொள்கிறார்கள்.
Recommended Video
பாட்னா: பிரதமர் மோடிக்கும் எதிராக பாஜக கூட்டணியிலேயே முக்கிய கலகக் குரல் ஒன்று எழுந்துள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள மிக முக்கியமான தலைவர் ஒருவர் மோடிக்கு எதிராக அணி திரட்ட தொடங்கியுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்காக பீகாரில் பாஜக பெரிய கூட்டணியை அமைத்து இருக்கிறது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார், லோக் ஜன சக்தியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் ஆகிய முக்கிய கட்சி தலைவர்கள் பாஜக கூட்டணியில் சேர்ந்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த கூட்டணியில் இருக்கும் நிதிஷ் குமாருக்கும், மோடிக்கும் இடையில் சிறிய உரசல் ஏற்பட்டு இருப்பதாக செய்திகள் வருகிறது.

என்ன உரசல்
பிரதமர் மோடிக்கும் பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டு இருப்பதாக தேசிய அரசியலில் பேசிக்கொள்கிறார்கள். இதனால் பீகாரில் மோடிக்கு எதிராக காய்கள் நகர்த்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நிதிஷ் குமார் இன்னும் சில நாட்களில் முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார்.

எப்படி இவர்கள்
பிரதமர் மோடிக்கும் பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் இடையில், இருவரும் முதல்வராக இருந்த காலத்தில் இருந்தே பிரச்சனை இருக்கிறது. முக்கியமாக குஜராத் முதல்வராக இருந்து கொண்டு மோடி பிரதமர் ஆக ஆசைப்பட்ட சமயத்திலேயே அதை எதிர்த்தவர் நிதிஷ் குமார். ஆனால் கடைசியில் இவர்கள் உறவில் கொஞ்சம் சுமூகம் ஏற்பட்டு தற்போது ஒன்றாக கூட்டணி அமைத்து இருக்கிறார்கள்.

சிக்கல் என்ன
ஆனால் தேர்தல் நிலவரம் 2014 போல இந்த முறை இருக்காது. 2014ல் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று தேர்தலில் வெற்றிபெற்றது. அதனால் நிதிஷ் குமாரின் தயவு பாஜகவிற்கு தேவையில்லாமல் போனது. ஆனால் இப்போது நிலைமை அப்படி கிடையாது. பாஜக இந்த முறை ஆட்சியை பிடிக்க மாநில கட்சிகளின் ஆதரவும் தேவை என்று கூறுகிறார்கள்.

என்ன கணிப்பு
இதுவரை வந்துள்ள கருத்து கணிப்புகளின்படி பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியாக இருந்தாலும் சரி, காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியாக இருந்தாலும் சரி இரண்டு கூட்டணியும் தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றிபெற முடியாது. இவர்கள் ஆட்சி அமைக்க மாநில கட்சிகளின் ஆதரவு தேவை.

நிதிஷ் திட்டம்
இங்குதான் நிதிஷ் குமார் மோடிக்கு எதிராக மீண்டும் குரல் கொடுக்க தொடங்கி உள்ளார் என்று தேசிய அரசியலில் பேசிக்கொள்கிறார்கள். அதாவது, பாஜகவிற்கு மாநில கட்சிகள் ஆதரவு கிடைக்க வேண்டும் என்றால், மோடிக்கு பதிலாக வேறு ஒருவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்று, நிதிஷ் குமார் இப்போதே கூறி வருவதாக பேசிக்கொள்கிறார்கள்.

யார் வருவார்
யார் வேண்டுமானாலும் வரட்டும், ஆனால் மோடி வர வேண்டாம் என்று நிதிஷ் குமார் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கிறார்கள். பாஜக கூட்டணியில் நிதிஷ் குமாரும் இந்த பிரதமர் ரேஸில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக சமயங்களில் பிரதமர் பதவியை விட்டுக்கொடுத்துவிட்டு, நிதிஷ் குமாருக்கு கூட பிரதமர் வாய்ப்பை அளிக்கலாம் என்று கூறுகிறார்கள்.

பேச போகிறார்
இது தொடர்பாக நிதிஷ் குமார் இன்னும் சில நாட்களில் பாஜகவிற்கு நெருக்கமான கட்சிகளுடன் பேச போகிறார் என்றும் கூறுகிறார்கள். ஆனால் அதற்கு முன் பாஜக நிதிஷ் குமாரை சமாதானம் செய்யவும் முயற்சி செய்யும். கூட்டணியில் குழப்பம் வேண்டாம் தேர்தல் முடிவுகளுக்கு பின் பேசலாம் என்று நிதிஷ் குமாரை பாஜக சமாதானம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications