பீகார் மாநில முதல்வராக.. 10வது முறையாக பதவியேற்றார் நிதிஷ்குமார்! தலைவர்கள் வாழ்த்து
பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான என்டிஏ கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இந்நிலையில், பீகாரின் முதலமைச்சராக நிதிஷ்குமார் இன்று பதவியேற்றார். பீகார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்பது இது 10வது முறையாகும்.
பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதற்கு நவ.6 மற்றும் நவ.11 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் நிதிஷ்குமார் தலைமையிலான என்டிஏ கூட்டணி 202 தொகுதிகளை வென்று அசத்தியிருக்கிறது.

என்டிஏ கூட்டணியின் வெற்றி
பாஜக 89, ஜேடியு 85 தொகுதிகளை கைப்பற்றியிருக்கின்றன. மகாராஷ்டிராவை போல, நிதிஷ்குமாரை பாஜக கழற்றிவிட்டுவிடும் என்று பேசப்பட்டு வந்தது. ஏனெனில் தேர்தலை எதிர்கொள்ளும்போது, தங்களின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை பாஜக அறிவிக்கவில்லை. நிதிஷ்குமார் கூட்டணிக்கு தலைமையாக இருந்தாலும், அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதில் தயக்கம் இருந்தது. பின்னர் வேறு வழியே இல்லாமல், நிதிஷை முதல்வராக ஏற்பதாக அமித்ஷா கூறினார்.
பிரமாண்ட ஏற்பாடுகள்
இதனைடுத்து தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறவில்லை என்பதாலும், ஆட்சி அமைக்க நிதிஷின் உதவி தேவை என்பதாலும் நிதிஷ்குமாரை முதலமைச்சராக பாஜக ஏற்றுக்கொண்டது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில் நிதிஷ்குமாரை என்டிஏ கூட்டணி முதலமைச்சராக தேர்வு செய்தது. இதனையடுத்து இன்று நிதிஷ்குமார் முதலமைச்சராக பொறுப்பேற்றார். இதற்காக பாட்னா காந்தி மைதானத்தில் பிரமாண்ட பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மதியம் 12 மணிக்கு நிதிஷ்குமார் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
கெத்து காட்டிய சிறிய கட்சிகள்
என்டிஏ கூட்டணியில் பாஜக, ஜேடியு தவிர மற்ற கட்சிகளும் நன்றாக ஸ்கோர் செய்திருக்கின்றன. குறிப்பாக மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) 19 தொகுதிகளையும், மத்திய அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா கட்சி 5 தொகுதிகளையும், மாநிலங்களவை எம்.பி. உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா கட்சி 4 தொகுதிகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. காங்கிரஸ் வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கும் நிலையில், சிறிய கட்சிகள் களத்தில் கெத்து காட்டியிருப்பது காங்கிரஸுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு
முதலமைச்சராக நிதஷ்குமார் தேர்வாகியிருக்கும் நிலையில், பாஜக பேரவை குழு தலைவராக தாராப்பூர் தொகுதி எம்எல்ஏ சாம்ராட் சௌத்ரியும், துணை தலைவராக லக்கிசராய் தொகுதி எம்எல்ஏவுமான விஜய்குமார் சின்ஹாவும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். கடந்த ஆட்சியில் இவர்கள் இருவரும் துணை முதல்வராக பொறுப்பு வகித்திருந்தனர். இந்த முறையும் இவர்களுக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. நிதிஷ்குமாருடன் இருவரும் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். அதேபோல 20-36 எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இதில் கூட்டணி கட்சியினருக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
பலத்த பாதுகாப்பு
பதவியேற்பு விழா நடக்கும் காந்தி மைதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. காந்தி மைதானத்தைச் சுற்றியுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நிதிஷ் குமார் இதற்கு முன்னர் ஒன்பது முறை முதல்வர் பதவிப் பிரமாணம் எடுத்துள்ளார். கடந்த 2000ம் ஆண்டில் ஏழு நாட்கள் மட்டும் முதல்வராக பதவி வகித்தார். பின்னர் 2005, 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் (இரண்டு முறை) பதவியேற்றார். 2017 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளிலும் அவர் முதல்வராகப் பதவியேற்றார்.
2022 ஆம் ஆண்டில், என்டிஏ கூட்டணயிலிருந்து பிரிந்து ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணியுடன் மீண்டும் முதல்வரானார். 2024 ஆம் ஆண்டில் மீண்டும் NDA கூட்டணியுடன் முதல்வரானார். தற்போது, 10வது முறையாகப் பதவியேற்றுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications