பாஜக ஆதரவுடன் பீகார் முதல்வராக பதவியேற்றார் நிதிஷ்குமார்!
பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். இதற்கிடையே நிதிஷ்குமார் இப்போது மீண்டும் பீகார் முதல்வராக பதவியேற்றார்.
இன்று மாலை மீண்டும் பாஜக ஆதரவுடன் முதல்வராக பொறுப்பேற்றார். 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபையில் தற்போது ஜேடியு கூட்டணி ஆட்சி உள்ளது. ஜேடியு, ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இணைந்து உருவாக்கிய மகா பந்தன் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது.

இந்த கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறினால் அவர்களுக்குப் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கிடைக்காது. இந்த நிலையில் அவர் பாஜகவுடன் இணைந்து கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனிப்பெரும் ஆட்சி: 79 எம்எல்ஏக்களுடன் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி தனிப்பெரும் கட்சியாக இருக்கிறது. அவர்களை விட ஒரு இடம் குறைவாக அதாவது 78 எம்எல்ஏக்களுடன் பாஜக இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கிறது. 45 எம்எல்ஏக்களுடன் நிதிஷ்குமாரின் ஜேடியு மூன்றாவது இடத்திலும் உள்ளது.
தொடர் கூட்டங்கள்: இந்த நிலையில் பாஜக + ஜேடியு இணைந்து அங்கே ஆட்சி அமைக்க உள்ளது. நிதிஷ் குமாருக்கு சில கட்டுப்பாடுகளுடன் ஆதரவு அளிப்பது தொடர்பாக பாஜக இன்று முடிவு எடுக்க உள்ளது. இதற்காக இன்று காலை 10 மணிக்கு பாஜக சிறப்பு ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது
அதை தொடர்ந்து இன்னொரு பக்கம் இன்று காலை 10 மணிக்கு தனது இல்லத்தில் ஜேடியு எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களின் கூட்டத்திற்கு நிதிஷ்குமார் அழைப்பு விடுத்திருந்தார்., சில ஜேடியு எம்எல்ஏக்கள் ஏற்கனவே பீகார் முதல்வரைச் சந்தித்து பாட்னாவில் தங்கியிருக்கிறார்கள். மாநில தலைநகருக்கு வராத எம்.எல்.ஏ.க்கள் விரைவில் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
பாஜக எம்எல்ஏக்கள் நிதிஷ் குமாரின் இல்லத்துக்கு வந்து முதல்வரிடம் ஆதரவு கடிதம் கொடுத்தனர். NDA கூட்டுக் கூட்டத்திற்குப் பிறகு, NDA சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக நிதிஷ் தேர்வு செய்யப்பட்டார்.
ராஜினாமா பதவி ஏற்பு: இதையடுத்து பீகார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் இன்று காலை ராஜினாமா செய்தார். இன்று மாலை மீண்டும் பாஜக ஆதரவுடன் முதல்வராக பொறுப்பேற்றார்.
லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) அனைத்து அமைச்சர்களையும் நிதிஷ்குமார் இன்று பதவி நீக்கம் செய்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்ஜேடியில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர்களுக்குப் பதிலாக அவர் பாஜக எம்எல்ஏக்களை அமைச்சர்களாக கொண்டு வர வாய்ப்புள்ளது.
அதோடு, இன்னும் 3 மாதங்களில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தையும் பாஜக மற்றும் ஜேடி(யு) கட்சிகள் இறுதி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களாக லாலுவின் ஆர்ஜேடி கட்சிக்கும் - நிதிஷ் குமாருக்கும் இடையே உரசல் இருந்தது. அதேபோல் இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் பதவி நிதிஷ் குமாருக்கு கொடுக்கப்படவில்லை என்பதும் பெரிய விவாதமாக இருந்தது.
இதுதான் நிதிஷ் குமார் மீண்டும் பாஜக கூட்டணிக்கு செல்ல காரணம் ஆகும். இதனால் இந்தியா கூட்டணி உடையும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications