‛பீகாரில் பாஜகவுக்கு 2 துணை முதல்வர்கள்’.. யார் அவர்கள் தெரியுமா? மீண்டும் முதல்வரான நிதிஷ் குமார்!
பாட்னா: பீகார் முதல்வர் பதவியை இன்று காலையில் நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார். இதையடுத்து பாஜக ஆதரவோடு இன்று மாலை 5 மணிக்கு நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். அவருடன் பாஜகவின் 2 தலைவர்கள் துணை முதல்வராகவும் பொறுப்பு ஏற்ற நிலையில் அவர்கள் யார்? பின்னணி என்ன என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
பீகார் மாநிலத்தில் கடந்த 2020ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் நிதிஷ் குமாரின் ஜேடியூ மற்றும் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் தனித்தனியாக போட்டியிட்டது. மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 122 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

தேர்தல் முடிவு வெளியான நிலையில் பாஜக 74 தொகுதிகளில், ஜேடியூ 43 தொகுதிகளிலும் வென்றது. இந்த தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சி 72 தொகுதிகளிலும் காங்கிரஸ் 19 தொகுதிகளிலும் வென்று இருந்தது. இதையடுத்து பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடித்தது. ஜேடியூவின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வரானார்.
இந்த கூட்டணி ஆட்சி 2 ஆண்டுகள் வரை நடந்தது. 2022ல் திடீரென்று நிதிஷ் குமார் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார். முதல்வர் பதவியை தன்னிடம் இருந்து பாஜக பறிக்க திட்டமிட்டதாக குற்றம்சாட்டி அவர் கூட்டணியை முறித்தார். அதேவேளையில் ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து மீண்டும் நிதிஷ் குமார் முதல்வரானார்.
மேலும் பாஜகவை நிதிஷ் குமார் தொடர்ந்து விமர்சித்து வந்தார். பாஜகவை வரும் நாடாளுமன்ற தேர்தலில் வீழ்த்த ‛இந்தியா' கூட்டணி அமைய முக்கிய காரணமாக நிதிஷ் குமார் இருந்தார். தன்னை பிரதமர் வேட்பாளராகவும், ‛இந்தியா' கூட்டணி ஒருங்கிணைப்பாளராகவும் அறிவிக்க விரும்பிய நிலையில் அது நடக்கவில்லை. இதையடுத்து ‛இந்தியா' கூட்டணியை விட்டு வெளியேறி உள்ளார். மேலும் பீகாரில் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை அவர் முறித்து கொண்டதோடு இன்று நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
மாறாக அவர் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். பாஜக தனக்கு வழங்கும் ஆதரவு கடிதத்தை அவர் அம்மாநில ஆளுநரிடம் வழங்கி உள்ளார். இதையடுத்து இன்று மாலை 5 மணிக்கு பாஜக ஆதரவுடன் மீண்டும் நிதிஷ் குமார் பீகார் மாநில முதல்வராக பொறுப்பேற்றார். இவருடன் மொத்தம் 8 பேர் பதவியேற்றனர் இதில் 3 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள், 3 பேர் ஜேடியூவை சேர்ந்தவர்கள். இதுதவிர ஒரு சுயேச்சை மற்றும் எச்ஏஎம் கட்சியை சேர்ந்தவர்கள் பதவியேற்றனர்.
அதாவது நிதிஷ் குமாருடன் பாஜகவின் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் துணை முதல்வராக பதவியேற்றனர்.. மேலும் பாஜகவின் பிரேம் குமார் அமைச்சராகவும், ஜேடியூ கட்சியை சேர்ந்த விஜயேந்திர யாதவ், விஜய் சவுத்ரி, ஷ்ரவன் குமார் உள்ளிட்டவர்கள் அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றனர். மேலும் எச்ஏஎம் கட்சியின் சந்தோஷ் சுமன், சுயேச்சையான சுமித் சிங் உள்ளிட்டோரும் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.
இதில் துணை முதல்வரான பாஜகவின் சாம்ராட் சவுத்ரி பாஜக மாநில தலைவராக செயல்பட்ட அனுபவம் கொண்டவர். இவரது தந்தை ராணுவத்தில் பணியாற்றி அரசியலில் நுழைந்து எம்பியானார். அவர் நிதிஷ் குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவுக்கு மிகவும் நெருக்கமானவர். சாம்ராட் சவுத்ரி கடந்த 1990 முதல் அரசியலில் செயல்பட்டு வருகிறார். தொடக்கத்தில் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சியில் செயல்பட்டு வந்தார். 2014க்கு பிறகு கட்சி மாறி நிதிஷ் குமாரின் ஜேடியூவில் சேர்ந்தார். அதன்பிறகு 2018ல் பாஜகவில் இணைந்தார்.
பாஜகவில் மிக வேகமாக வளர ஆரம்பித்தார். கடந்த ஆண்டு வரை பாஜக மாநில தலைவராக செயல்பட்டு வந்தார். இவர் கோரி வகுப்பை சேர்ந்த இவர் பீகாரில் தற்போது பாஜகவின் ஓபிசி பிரிவின் தலைவராக அறியப்படுகிறார். சாம்ராட் சவுத்ரி இதற்கு முன்பு அமைச்சராக செயல்பட்டுள்ளார். இவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மிகவும் நெருக்கமானவர். தற்போது பீகார் சட்ட மேல்சபை உறுப்பினராக (எம்எல்சி) இருக்கும் நிலையில் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
அதேபோல் விஜய் குமார் சின்ஹா பீகாரில் எதிர்க்கட்சி தலைரவாக செயல்பட்டு வந்தார். இவர் லகிசாரை தொகுதியில் இருந்து 2010ம் ஆண்டு முதல் தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இவர் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி முதல் 2022 ஆகஸ்ட் 24ம் தேதி வரை பீகார் மாநிலத்தில் நடந்த முந்தைய ஜேடியூ-பாஜக கூட்டணியின்போது சபாநாயகராக இருந்த நிலையில் இப்போது துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications