நிதிஷ் குமார் ராஜினாமா.. பீகார் முதல்வராக 10வது முறையாக மீண்டும் நாளை பதவியேற்பு! மோடி பங்கேற்பு
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் வெற்றியை தொடர்ந்து நாளை பாஜக கூட்டணி ஆட்சியை அமைக்கிறது. பாஜக கூட்டணியின் புதிய முதல்வராக மீண்டும் நிதிஷ் குமார் நாளை காலை 11.30 மணிக்கு பதவியேற்க உள்ளார். இதையடுத்து இன்று அவர் தனது காபந்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்து புதிதாக ஆட்சியமைக்க எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் முகமது ஆரிப் கானிடம் வழங்கினார்.
பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த தேர்தல் வெற்றியை தொடர்ந்து மீண்டும் பாஜக கூட்டணி அங்கு ஆட்சி அமைப்பது உறுதியானது. இதையடுத்து புதிய முதல்வர் தேர்வு செய்ய பாஜக கூட்டணி எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று நடந்தது.

பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள அம்மாநில சட்டசபை வளாகத்தில் இந்த கூட்டம் நடந்தது. பீகார் சட்டசபையின் என்டிஏ கூட்டணியின் சட்டசபைகுழு தலைவராக நிதிஷ் குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் அவர் முதல்வராவது உறுதியானது.
இதையடுத்து நிதிஷ் குமார் சட்டசபை வளாகத்தில் இருந்து பீகார் ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அங்கு ஆளுநர் முகமது ஆரிப் முகமது கானை சந்தித்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தனக்கு உள்ள ஆதரவு எம்எல்ஏக்களின் கடிதத்தை கொடுத்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இதையடுத்து நாளை காலை 11.30 மணிக்கு பாட்னா காந்தி மைதானத்தில் நடக்கும் விழாவில் நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்க உள்ளார். கடந்த 2005ம் ஆண்டு மதல் தொடர்ந்து 20 ஆண்டுகளாக நிதிஷ் குமார் பீகார் முதல்வராக உள்ளார். அவர் கூட்டணியை அடிக்கடி மாற்றியதால் 9 முறை முதல்வராக பதவியேற்று இருந்தார். நாளை 10வது முறையாக அவர் முதல்வராக உள்ளார்.
இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவரும்,மத்திய அமைச்சருமான ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்பட பிற பாஜக நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். எம்எல்ஏக்கள், எம்பிக்கள், பிற மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவையொட்டி காந்தி மைதானத்தி்ல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக பீகாரில் மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடந்தது. அதன்பிறகு கடந்த 14ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இங்கு ஒரு கட்சி 123 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
மாறாக என்டிஏ எனும் பாஜக கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைத்தது. இந்த கூட்டணி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கட்சி வாரியாக பார்த்தால் பாஜக 89 தொகுதிகளில் வென்று வென்றது. இதன்மூலம் பீகாரில் தனிப்பெரும் கட்சியாக பாஜக மாறி உள்ளது.
அதேபோல் கூட்டணியில் உள்ள நிதிஷ் குமாரின் ஜேடியூ எனும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி 85 தொகுதிகளில் வென்றுள்ளது.
இந்த கூட்டணியில் அங்கம் வகித்த மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் எல்ஜேபிஆர்வி கட்சி எனும் லோக்ஜன்சக்தி கட்சி (ராம்விலாஸ்) கட்சி 19 தொகுதிகளிலும், இன்னொரு மத்திய அமைச்சர் ஜிதன்ராம் மஞ்சியின் எச்ஏஎம்எஸ் எனும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (செக்குலர்) கட்சி 5 தொகுதிகளிலும், உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (ஆர்எஸ்எச்டிஎல்கேஎம்) கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இப்படியாக பாஜகவின் கூட்டணி மொத்தம் 202 தொகுதிகளை வென்றது.
மாறாக எதிர்க்கட்சிகளின் ‛மகாகத்பந்தன்' கூட்டணி படு தோல்வியடைந்துள்ளது. இந்த கூட்டணி மொத்தம் 35 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி எனும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் உள்ள சிபிஐ(எம்எல்) (எல்) கட்சி 2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஐஐபி எனும் இந்தியன் இன்க்ளூசிவ் கட்சி தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது.
இதுதவிர, அசாதுதீன் ஓவைசியின் கட்சியை சேர்ந்த ஏஐஎம்ஐஎம் கட்சியினர் 5 தொகுதிகளிலும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி தனித்து களமிறங்கியது. 238 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் ஒரு தொகுதியில் கூட அவரது வேட்பாளர் வெல்லவில்லை. அதுமட்டுமின்றி 236 வேட்பாளர் டெபாசிட் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications