Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கடைசி சான்ஸ்.." மோடியின் தியானத்திற்கு காரணமே வேற.. சொல்கிறார் சத்ருகன் சின்ஹா! என்ன மேட்டர்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பிரதமர் மோடி மூன்றாவது நாளாகக் கன்னியாகுமரியில் தியானம் செய்து வரும் நிலையில், அவர் ஊடக வெளிச்சத்திற்காகவே இதுபோல செய்வதாக திரிணாமுல் வேட்பாளர் சத்ருகன் சின்ஹா சாடியுள்ளார்.

நமது நாட்டில் இந்த முறை மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆறு கட்ட தேர்தல் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், இன்று கடைசிக் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

lok Sabha election 2024 Trinamool congress Narendra Modi 2024

மொத்தம் 8 மாநிலங்கள் 57 தொகுதிகளில் இன்று கடைசிக் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வரும் நிலையில், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

லோக்சபா தேர்தல்: இன்று மொத்தம் 57 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. பீகார் மாநிலத்தில் எட்டு தொகுதிகள், சண்டிகரில் ஒரு தொகுதி, இமாச்சலப் பிரதேசத்தில் நான்கு தொகுதிகள், ஜார்க்கண்டில் மூன்று தொகுதிகள், ஒடிசாவில் ஆறு தொகுதிகள், பஞ்சாப் மாநிலத்தில் 13 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் ஒன்பது தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

பிரதமர் மோடி: இதில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் இன்று தான் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிரதமர் மோடி ஏற்கனவே கடந்த 2014 மற்றும் 2019 தேர்தல்களில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ள நிலையில், இப்போது மூன்றாவது முறையாக அங்குப் போட்டியிடுகிறார். அங்கு மோடிக்கு எதிராகக் காங்கிரஸ் பகுஜுன் சமாஜ் கட்சி, சுயேச்சை உள்ளிட்ட ஆறு வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

வாரணாசி தொகுதியில் வாக்குப்பதிவு நடந்தாலும் கூட பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்து வருகிறார். கடைசிக் கட்ட பிரச்சாரம் நிறைவடைந்த உடன் வியாழக்கிழமை கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி, அங்குள்ள விவேகானந்தர் பாறையில் அமர்ந்து தியானம் செய்து வருகிறார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் நேற்று வெளியாகி இருந்தது. அவர் இன்று பிற்பகல் வரை தியானம் செய்வார் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சத்ருகன் சின்ஹா: இதற்கிடையே பிரதமர் மோடியின் தியானம் தொடர்பாக பழம்பெரும் நடிகரும், அசன்சோல் லோக்சபா தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளருமான சத்ருகன் சின்ஹா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகப் பீகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய சத்ருகன் சின்ஹா, "பிரதமரை நான் நண்பராகவே பார்க்கிறேன். ஆனால், இப்போது அவர் கன்னியாகுமரியில் தியானத்திற்காகச் சென்றது போலத் தெரியவில்லை. ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவே அங்கு அவர் சென்றுள்ளார்.

கடும் தாக்கு: இதற்கு முன்பும் அவர் கேதார்நாத் சென்றபோது இதைச் செய்தார். அனைத்து மொபைல் லைன்கள், கேமரா மற்றும் ஊடகவியலாளர்களுடன் அவர் அங்குச் சென்றுள்ளார்.. பிரச்சாரம் செய்ய புதிய வழியாக அவர் இதைப் பயன்படுத்தி வருகிறார். ஆனால், இதெல்லாம் பலன் தராது. அவர் பல்வேறு வழிகளில் மக்களை திசைதிருப்ப முயன்றுவிட்டார். இதுவே அவருக்கான கடைசி வாய்ப்பு. ஆனால், இது பலன் தராது" என்றார்.

இன்றுடன் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில், வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்றைய தினமே அடுத்து 5 ஆண்டுகள் ஆட்சியைப் பிடிப்பது யார் என்பது தெரிந்துவிடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+