எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்த ராகுல்.. பாட்னாவில் காத்திருந்த தொண்டர்கள்.. உற்சாக வரவேற்பு
பாட்னா: எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் பாட்னாவில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என முழு வீச்சில் எதிர்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. அதே வேளையில், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் முனைப்பில் பாஜக உள்ளது.

பாஜகவின் இந்த வியூகத்தை தவிடு பொடியாக்கி ஆட்சியை பிடிக்கும் வகையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற திட்டத்தில் நிதிஷ் குமார் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசிவந்தார். இதன் அடுத்த கட்டமாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு நிதிஷ் குமார் ஏற்பாடு செய்துள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனவும் பிரதிநிதிகளை அனுப்பக் கூடாது எனவும் ஏற்கனவே நிதிஷ் குமார் கண்டிப்பு காட்டியிருந்தார். அந்த வகையில் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தி, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, சரத்பவார் என தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
காலை 11.30 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. பாஜகவை வீழ்த்தும் வகையில், 400 தொகுதிகளில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து எதிர்க்கட்சிகள கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் எனவும் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க ஸ்டாலின் உள்பட பல முக்கிய தலைவர்கள் நேற்றே பீகார் சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் பாட்னா சென்றனர். பாட்னா சென்ற ராகுல் காந்தி, கார்கேவுக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கையில் ரோஜாப்பூக்களுடன் காத்திருந்த கட்சி நிர்வாகிகள் ராகுலுக்கு வணக்கம் செலுத்தி பூக்களை கொடுத்து வரவேற்னர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications