பாஜகவை வீழ்த்த வியூகம்.. 16 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற கூட்டம் நிறைவு.. ஆலோசிக்கப்பட்டது என்ன?
பாட்னா: நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் பீகாரில் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட 16 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக வரும் தேர்தலிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பெற வேண்டும் என வியூகம் வகுத்து வருகிறது. தேர்தலுக்கான பணிகளை தற்போதே தொடங்கி முழு வீச்சில் அக்கட்சி செயல்பட தொடங்கியுள்ளது. பாஜகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என கங்கணம் கட்டியுள்ள எதிர்க்கட்சிகள், ஓரணியில் திரண்டால் இது சாத்தியப்படும் என பேசி வருகின்றன.
இதற்கான முயற்சியை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக நிதிஷ்குமார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தி, திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், லோக்சபா தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துவதற்காக பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் தொடங்கி நடைபெற்றது.

மதியம் 12.00 மணியளவில் கூட்டம் தொடங்கியது. நிதிஷ் குமார் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி, முதல்வர் மு.க ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சரத் பவார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டம் தேசிய அளவில் உன்னிப்பாக கவனம் பெற்றது. 12 மணியளவில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பாஜகவை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. இமாசல பிரதேச மாநிலம் சிம்லாவில் எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் 16 கட்சித்தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். ஆம் ஆத்மி சார்பில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த்மான், சஞ்செய் சிங் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
அதேபோல், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத்பவார், சிவசேனா (உத்தவ் பாலாசாகேப்) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி ராஜா, மார்க்சிஸ்ட் லெனினஸ்ட் கட்சி சார்பில் தீபங்கர் பட்டாச்சார்யா ஆகியோரும் பங்கேற்றனர்.
அதேவேளையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி, ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம், கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம், பஞ்சாப் சிரோமணி அகாலி தளம், உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கவில்லை.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி!












Click it and Unblock the Notifications