PK-வுக்கே இந்த அடியா.. பிரசாந்த் கிஷோரின் 236 வேட்பாளர்களின் டெபாசிட் காலி.. காங் - RJDக்கும் ஷாக்
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்த தேர்தலில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கு மரணஅடி விழுந்துள்ளது. அவரது கட்சி சார்பில் போட்டியிட்ட 238 வேட்பாளர்களில் 236 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். அதேபோல் காங்கிரஸ் - தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி கட்சிகளும் டெபாசிட்டை இழந்துள்ளன. பாஜக கூட்டணி கட்சியினர் மட்டும் டெபாசிட் இழக்கவில்லை. டெபாசிட் என்பது என்ன? எந்தெந்த கட்சியில் எவ்வளவு பேர் டெபாசிட் இழந்துள்ளனர் என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தம் 243 சட்டசபை தொகுதிகளில் 123 இடங்களில் வென்றால் தனித்து ஆட்சி அமைக்கலாம். ஆனால் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.

இந்நிலையில் தான் பீகார் தேர்தல் ரிசல்ட் தொடர்பான பல்வேறு தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் எத்தனை வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர் என்பது பற்றிய விவரம் வருமாறு:
அனைத்து இடங்களிலும் தோல்வி
இந்த தேர்தலில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் போட்டியிட்டது. 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கட்சியை தொடங்கினார். ஆனால் அவர் பீகார் தேர்தலில் போட்டியிடவில்லை. அதேவேளையில் அவரது கட்சி வேட்பாளர்கள் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 238 இடங்களில் களம் இறங்கினர்.
இதில் ஒரு இடத்தில் கூட பிரசாந்த் கிஷோரின் வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை. இன்னும் சொல்லப்போனால் மொத்தம் 236 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். அதிலும் பல தொகுதிகளில் அவரது கட்சி வேட்பாளர்கள் நோட்டோவை கூட முந்தவில்லை.
டெபாசிட் என்பது என்ன?
டொபாசிட் என்பது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் கட்டும் பணமாகும். பீகார் சட்டசபை தேர்தலில் வேட்பாளர்கள் ரூ.10 ஆயிரத்தை டெபாசிட் தொகையை கட்டுவார்கள். ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பதிவாகும் ஓட்டுகளில் 6ல் ஒரு பங்கை பெற வேண்டும். அப்படி பெற்றால் டெபாசிட் தொகை கிடைக்கும். இல்லாவிட்டால் டொபாசிட் இழந்து விடுவார்கள்.
அந்த வகையில் பிரசாந்த் கிஷோர் களமிறக்கிய 238 வேட்பாளர்களில் 236 பேர் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர். தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சட்டசபை தேர்தலில் வெல்ல வைத்ததே நான் தான் என்று கூறி வந்த பிரசாந்த் கிஷோருக்கு இது பெரிய அடியாக பார்க்கப்படுகிறது. பலரும் அவரை ட்ரோல் செய்ய தொடங்கி உள்ளனர்.
காங்கிரஸ் - ஆர்ஜேடி நிலவரம்
அதேபோல் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தம் 61 இடங்களில் போட்டியிட்ட நிலையில் 6 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர். தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி கட்சி 143 தொகுதிகளில் போட்டியிட்டதில் ஒருவர் டெபாசிட் இழந்துள்ளார்.
அதேபோல் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி மொத்தம் 28 தொகுதிகளில் போட்டியிட்டு 19 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 181 தொகுதிகளில் களமிறங்கி 176 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. ஆம்ஆத்மி போட்டியிட்ட 83 இடங்களிலும் டெபாசிட் இழந்துள்ளது.
இதுதவிர பிற சிறிய கட்சிகள், 952 சுயேச்சை வேட்பாளர்கள் என்று மொத்தம் 2,107 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். மொத்தம் 2,616 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் 2,107 வேட்பாளர்கள் தங்களின் டெபாசிட் தொகையான ரூ.10 ஆயிரத்தை இழந்துள்ளனர். இதன்மூலம் தேர்தல் ஆணையத்துக்கு ரூ.2.12 கோடி ‛டெபாசிட்' தொகை கிடைத்துள்ளது.
டெபாசிட் இழக்காத பாஜக கூட்டணி
அதேவேளையில் பாஜக கூட்டணியில் உள்ள பாஜக, நிதிஷ் குமாரின் ஜேடியூ, சிராக் பஸ்வானின் கட்சி, ஜிதன் ராம் மஞ்சியின் கட்சி மற்றும் உபேந்திர குஷ்வாஹாவின் கட்சி வேட்பாளர்கள் யாரும் டெபாசிட் இழக்கவில்லை. பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகளில் 123 இடங்களில் வென்றால் தனித்து ஆட்சி அமைக்கலாம். ஆனால் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.
எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு சீட்
என்டிஏ கூட்டணியில் பாஜக 89 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக மாறி உள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ் குமாரின் ஜேடியூ எனும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி 85 தொகுதி, மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் எல்ஜேபிஆர்வி கட்சி எனும் லோக்ஜன்சக்தி கட்சி (ராம்விலாஸ்) கட்சி 19 தொகுதி, மத்திய அமைச்சர் ஜிதன்ராம் மஞ்சியின் எச்ஏஎம்எஸ் எனும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (செக்குலர்) கட்சி 5 தொகுதி, உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (ஆர்எஸ்எச்டிஎல்கேஎம்) கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
அதேவேளையில் ‛மகாகத்பந்தன்' கூட்டணியில் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி எனும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் உள்ள சிபிஐ(எம்எல்) (எல்) கட்சி 2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஐஐபி எனும் இந்தியன் இன்க்ளூசிவ் கட்சி தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த 2 கூட்டணியை தவிர்த்து தனியாக போட்டியிட்ட அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளிலும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications