பீகாரில் அதிகாலையிலே சோகம்.. பாபா சித்தநாத் கோயிலில் கூட்ட நெரிசல்.. பக்தர்கள் 7 பேர் உயிரிழப்பு
பாட்னா: பீகார் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள மக்தும்பூர் பகுதி கோயிலில் நெரிசல் ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்தனர். 35க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பீகாரின் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள மக்தும்பூர் பகுதியில் பாபா சித்தநாத் கோவில் உள்ளது. இந்த கோயிலில் இன்று காலை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. அப்போது திடீரென ஏற்பட்ட நெரிசலில் பக்தர்கள் 7 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோயிலில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த காவல் கண்காணிப்பாளர் திவாகர் குமார் விஸ்வகர்மா, சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது அங்குள்ள நிலைமையை கண்காணித்து வருகிறோம். அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளது" என்றார். கோவிலில் கூட்ட நெரிசலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் உத்தர பிரதேசத்தின் ஹத்ராசில் சாமியார் நாராயணன் ஹரி நடத்திய ஆன்மீக நிகழ்ச்சியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 120க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். இந்த சம்பவம் ஒட்டு மொத்த நாட்டையும் அதிர வைத்தது. சிறிய இடத்தில் அதிக அளவிலான மக்கள் திரண்டதே கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட ஒரு காரணம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications