Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாலி கட்டும் நேரத்தில் உடைந்த குட்டு! கண்ணாடி பின்னால் மறைந்த ரகசியம்! மணப்பெண்ணை கண்டு திகைத்த ஜனம்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு திருமணத்தை செய்யலாம் என்பார்கள்.. இதோ இந்த மாப்பிள்ளை ஒரு பொய்தான் சொன்னார்.. அதுக்கே திருமணம் நின்றுவிட்டது.. பீகாரில் நடந்த இந்த சம்பவம் தான் இணையத்தில் வைரலாகி, அனைவருக்குமே திகைப்பை தந்து வருகிறது. மணமேடையில் கடைசி நேரத்தில் என்ன நடந்தது தெரியுமா?

எத்தனையோ திருமணங்கள் தாலி கட்டுவதற்கு கடைசி நிமிடங்களில் நின்று போவதுண்டு. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.. நம்முடைய இந்தியாவிலும் இப்படியான சம்பவங்கள் நடந்துள்ளன.. மாப்பிள்ளை 2-ம் வாய்ப்பாட்டை சொல்லாதது, உருது வார்த்தைகளை சொல்லாதது, உள்ளிட்ட வினோத காரணங்களுக்காக மணப்பெண்கள் தங்கள் கல்யாணத்தையே நிறுத்திய சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

thaali groom glasses

பெரும்பாலும், வரதட்சணை பிரச்சனைகள் ஏதாவது வெடித்துவிடும்.. அல்லது சம்பந்தப்பட்ட ஆணோ, பெண்ணோ, இருவரில் யாராவது ஒருவர் காதல் விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருப்பார்கள்.. இதனாலும் திருமணங்கள் நின்றுவிடுவது உண்டு..

தாலி கட்டும் நேரத்தில்

ஆனால், பீகாரில் என்ன நடந்தது தெரியுமா? மேற்கு சம்பாரனில் உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு, அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை திருமணத்துக்காக பேசி முடித்திருந்தனர்.. கடந்த புதன்கிழமைதான் இவர்களுக்கு திருமணம் நடைபெறவிருந்தது.

இதற்காக செவ்வாய் கிழமையில் இருந்தே திருமண மண்டபம் வெகு ஜோராக அலங்காரத்தில் மின்னியது.. விடிந்தால் கல்யாணம் என்பதால் தடபுடல் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.. பொழுது விடிந்ததுமே இரு குடும்பத்தினரின் உறவினர்களும், நண்பர்களும் மண்டபத்தில் குவிய துவங்கிவிட்டனர்.

தடபுடல் திருமண வரவேற்பு

மேள தாளத்துடன், உறவினர்கள் புடை சூழ, மணமகன் ஆடம்பரமாக மண்டபத்தில் வந்திறங்கினார்.. ஆடல், பாடலுடன் மண்டபத்திற்குள் மணமகனை அவரது நண்பர்கள் புடைசூழ அழைத்து சென்று, மணமேடையில் உட்கார வைத்தனர்.

மணமகன் பக்கத்தில் வந்தமர்ந்ததுமே, அவரை மணமகள் திரும்பி பார்த்தார்.. அப்போது, மணமகன் கண்ணாடி அணிந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துவிட்டார்..
மாப்பிள்ளைக்கு ஒரு கண்ணில் பார்வை பிரச்சனை உள்ளது என்றும், அந்த பார்வை குறைபாட்டை மறைப்பதற்காக கண்ணாடி அணிந்திருப்பதையும் மணப்பெண்ணால் ஏற்க முடியவில்லை.

கண் பார்வை பிரச்சனை

திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோதே, திருமணத்தை நிறுத்துங்கள் என்று மேடையிலேயே போட்டுடைத்தார் மணமப்பெண்.

மணமகனுக்கு கண்ணில் பிரச்சனை என்று ஏன் என்னிடம் முன்பே சொல்லவில்லை? உண்மையை மறைத்த நபரை என்னால் திருமணம் செய்ய முடியாது, இப்போதே ஒரு பொய், இன்னும் எத்தனை உண்மைகளை மறைத்திருப்பாரோ? எனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று கறாராக சொன்னார் மணமகள்.

களேபரமான மண்டபம்

இதைக்கேட்டதும் மணமகன் உட்பட அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர்.. இதனால் மணமகளை உறவினர்கள் சமாதானம் செய்ய முயன்றனர்.. மணமகன் குடும்பத்தினரும் விளக்கம் சொல்லி சமாதானம் செய்ய முயன்றனர்.. ஆனால் மணமகளின் பிடிவாதத்தை அவர்களால் போக்க முடியவில்லை.

இதனால் வாக்குவாதம் வெடித்தது.. இரு குடும்பத்தினருமே ஒருவரையொவர் காரசாரமாக திட்டி கொண்டனர்.. கொஞ்ச நேரத்தில் மண்டமே களேபரமாகிவிட்டது.. இரு தரப்பிலும் ஒருவரையொருவர் தாக்கி கொள்ளும் அளவுக்கு நிலைமைக்கு சென்றது.. உடனே மண்டபத்துக்குள் போலீஸ் நுழைந்தது.. இரு வீட்டாரையும் கட்டுப்படுத்தியது..

கிராம பஞ்சாயத்து - கறார் மணப்பெண்

பிறகு, இந்த பிரச்சனை கிராமப் பஞ்சாயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.. கிட்டத்தட்ட 2 மணி நேரம் பஞ்சாயத்து நடந்தது..

"ஒருவரை நம்பி, குடும்பம் நடத்த வேண்டுமானால், அவரிடம் குறைந்தபட்சம் நேர்மையாவது இருக்க வேண்டும், அப்படியொரு நேர்மை இந்த இளைஞரிடம் இல்லை. இன்னும் எத்தனை உண்மையை மணமகன் வீட்டில் மறைப்பார்களோ? எனவே இந்த திருமணத்தில் விருப்பமில்லை" என்று கூறி, மணமகள் தன்னுடைய பிடிவாதத்தில் உறுதியாக நின்றார்..

பஞ்சாயத்தாராலும் மணமகளை சமாதானம் செய்ய முடியவில்லை.. எனவே, மணமகளின் விருப்பத்துக்கு மாறாகவும் திருமணத்தை நடத்தி வைக்க விரும்பவில்லை என்று அறிவித்துவிட்டனர்.

எப்படியாவது இந்த திருமணம் நடந்துவிடும் என்ற நம்பிக்கையில், போலீஸ், ஊர் பஞ்சாயத்து வரை சென்று ஆர்வத்துடன் காத்திருந்தார் மணமகன்.. ஆனால், கடைசிவரை அவரது ஆசை நிறைவேறாமல், சோகத்துடன் தன்னுடைய வீட்டுக்கு கிளம்பி சென்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+