"சஸ்பென்ஸ்".. பாஜகவுடன் உறவு முறிகிறதா.. உஷார் ஆன நிதிஷ்குமார்.. எம்பி, எம்எல்ஏக்கள் அவசர கூட்டம்
நிதிஷ்குமார் பாஜக கூட்டணியில் இருந்து இன்று விலக முடிவு எடுக்க போகிறாரா
பாட்னா: பீகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலக, முதல்வர் நிதிஷ்குமார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரபரத்து வரும் நிலையில், இன்றைய தினம் கட்சி எம்பிக்கள் கூட்டத்திற்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார்.. அநேகமாக இந்த கூட்டத்திற்கு பிறகு, கூட்டணி குறித்த அறிவிப்பு ஏதாவது வெளியாகலாம் என்று கூறப்படுவதால், தேசிய அரசியலில் பரபரப்பு சூழ்ந்துள்ளது.
2 வருடங்களுக்கு முன்பு நடந்து முடிந்த தேர்தலில், லாலுவின் ஆர்ஜேடி 75 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்கியபோதும், கூட்டணியில் இருந்த கட்சிகள் மிகவும் சொற்பமான இடங்களை பெற்றதால், தேஜஸ்வி யாதவ் முதல்வராகும் வாய்ப்பு ஜஸ்ட் மிஸ் ஆகிவிட்டது..
Recommended Video
அதனால், ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் நிதிஷ் குமார் முதல்வராக பொறுப்பேற்றார். கூட்டணி ஆட்சிதான் நடந்து வருகிறது என்றாலும், பாஜகவால் நியமிக்கப்பட்ட முதல்வர் நிதிஷ் குமார் என்றே விமர்சிக்கப்பட்டது...

மோதல் புள்ளி
இறுதியில், பாஜக - ஐக்கிய ஜனதா தளம் இடையே நாளுக்கு நாள், முட்டல் மோதல்கள் அதிகரித்து வருகிறது. ஒரே நாடு - ஒரே தேர்தல் முறையை அமல்படுத்த மத்திய அரசு முயற்சித்து வரும் நிலையில், ஆட்சி ஆரம்பித்து 5 வருடம்கூடு இன்னும் முழுமையாக நிறைவேறுவதற்கு முன்னமேயே, ஐக்கிய ஜனதா தளம் "ஒரே நாடு - ஒரே தேர்தல் முறை"க்கு எதிர்ப்பு தெரிவித்ததே முதல் மோதல் புள்ளியாக பார்க்கப்படுகிறது.. இந்த உரசல்கள் அதிகமாகி, தற்போது, பாஜக - ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளின் கூட்டணி உடையும் நிலைமைக்கே சென்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி, தேசிய அரசியலை பரபரப்பாக்கி விட்டன..

மெயின் காரணம்
பாஜக மீதான அதிருப்திக்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. பீகாரில் ஐஏஎஸ் அதிகாரியான ஆர்சிபி குமார் சிங், ஐக்கிய ஜனதா தள மாநிலங்களவை எம்பியாக இருந்த நிலையில், கடந்த ஜூலை 31-ம் தேதியுடன் அவரது பதவி முடிந்தது. ஆனால், அவருக்கு மறுவாய்ப்பு வழங்கவில்லை... அத்துடன் மத்திய அரசில் உருக்கு துறை அமைச்சர் பதவியும் பறிபோனது.. கூட்டணியுடன் மோதல் அதிகமாக இதுவும் ஒரு முக்கிய காரணமாக சொல்லப்பட்டு வருகிறது..

உறவு முறிவு?
அதற்கேற்றார்போல், பாஜக - ஐக்கிய ஜனதாதளம் இடையேயான உறவு சரியில்லாமல் இருந்து வருகிறது... சமீபகாலமாக பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு நிகழ்ச்சிகளையும் நிதிஷ் குமார் புறக்கணித்திருந்தார்... கொரோனாவால் பாதிக்கப்பட்டதை காரணம் காட்டி, இந்த நிகழ்ச்சியை அவர் தவிர்த்தாலும், பாஜகவுடன் கருத்து வேறுபாடுதான் பிரதான காரணமாக சொல்லப்பட்டு வருகிறது. இப்படி 5 முறை நடந்த கூட்டத்தையும் அவர் புறக்கணித்ததுதான், கவனிக்கத்தக்கதாக உள்ளது.

அழைப்பு
அதுமட்டுமல்ல, ஜனாதிபதி பதவியை நிறைவு செய்த ராம்நாத் கோவிந்துக்கு மத்திய அரசு அளித்த விருந்து நிகழ்ச்சியையும் அவர் புறக்கணித்தார்... புதிய ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவியேற்பு விழாவையும் நிதிஷ் குமார் புறக்கணித்தார்.. இதனிடையே, ஐக்கிய ஜனதாதள கட்சியின் எம்பி, எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் கூட்டத்துக்கும் இன்றைய தினம் அழைப்பு விடுத்துள்ளார்.. அநேகமாக இந்த கூட்டத்தில், கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..

முறிகிறதா?
ஒருவேளை பாஜகவுடனான கூட்டணி முறியும் அளவுக்கு போனாலும் போகும் என்று ஐக்கிய ஜனதாதளக் கட்சி சீனியர்கள் தரப்பில் சொல்லப்பட்டும் வருகிறது.. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி யில் இருந்து விலகுவதற்கு நிதிஷ்குமார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது... இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தள கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தைதான், நிதிஷ்குமார் இன்று கூட்டி உள்ளார்.. இக்கூட்டத்திற்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவு அறிவிக்கப்படலாம் என்கிறார்கள்.. அப்படியானால், நிதிஷ்குமார் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது..

சுபம்
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி, தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம், இடதுசாரி முன்னணி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து மாற்று ஆட்சியமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வட்டமடிக்கின்றன.. இதனிடையே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, தொலைபேசியில் அழைத்து பேசிய நிதிஷ்குமார், அவரை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கேட்டுள்ளதாக ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. நிதிஷ்குமார் பாஜக கூட்டணி என்ன அறிவிக்க போகிறார்? கூட்டணி முடிவில் என்ன நிலைப்பாடு எடுக்க போகிறார்? அடுத்து யாருடன் கூட்டணி வைப்பார்? அதெல்லாம் இன்றே தெரிந்துவிடும்.. பார்ப்போம்..!
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications