பீகார் தேர்தல் முடிவுகள்: அனைவருக்குமான பாடம்.. நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றது. இந்நிலையில் நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "பீகார் தேர்தல் முடிவுகள் அனைவருக்குமான பாடம். மூத்த தலைவர் நிதிஷ்குமாருக்கு வெற்றிக்காக நான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் அவர் சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன். அதேபோல், இளம் தலைவர் தேஜஸ்வி யாதவின் ஓய்வில்லாத பிரச்சாரத்தையும், முயற்சியையும் நான் பாராட்டுகிறேன்.

MK Stalin Bihar Election 2025 2025 Bihar Election Results 2025

தேர்தல் முடிவுகள் என்பவை நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைதல், கூட்டணிகள், தெளிவான அரசியல் செயல்பாடுகள் மற்றும் இறுதி வாக்குப்பதிவு வரை அர்ப்பணிப்புடன் கூடிய நிர்வாகம் ஆகியவற்றை பிரதிபலிக்கின்றன. இந்தியா கூட்டணியின் தலைவர்கள், இந்தத் தேர்தல் செய்தியைப் புரிந்துகொண்டு, உருவாகி வரும் சவால்களை எதிர்கொள்ள வியூக ரீதியாகத் திட்டமிடக்கூடிய அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் ஆவர்.

இந்தத் தேர்தலின் முடிவு, இந்திய தேர்தல் ஆணையத்தின் தவறான செயல்களையும், பொறுப்பற்ற நடவடிக்கைகளையும் மூடிமறைத்துவிடாது. தேர்தல் ஆணையத்தின் மதிப்பு மிகக் குறைந்த நிலையில் உள்ளது. இந்த நாட்டின் குடிமக்கள், வலுவான, மேலும் பாரபட்சமற்ற ஒரு தேர்தல் ஆணையத்தை பெற உரிமையுடையவர்கள். அத்தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், வெற்றி பெறாதவர்களிடம்கூட நம்பிக்கையைத் தூண்டும் வகையில் இருக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

பீகாரில் மொத்தமிருக்கும் 243 தொகுதிகளில் பாஜக 89 தொகுதிகளையும், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. அதேபோல என்டிஏ கூட்டணியில் இருக்கும் LJPRV கட்சி 19 தொகுதிகளிலும், HAMS கட்சி 5 தொகுதிகளிலும், RSHTLKM கட்சி 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. 122 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்கலாம். ஆனால் என்டிஏ கூட்டணி 200க்கும் அதிகமான தொகுதிகளை வென்றிருக்கிறது. இருப்பினும் வாக்கு சதவீதத்தில் ஆர்ஜேடி முன்னிலையில் இருக்கிறது.

ஆர்ஜேடி - 23%
பாஜக - 20.08%
ஜேடியு - 19.25%

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+