பீகாரில் சர்ரென முன்னேறிய என்.டி.ஏ.. வாக்கு எண்ணிக்கையில் சதி நடக்கலாம்! தேஜஸ்வி பரபர புகார்!
பாட்னா: பீகார் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சதி நடக்கலாம் எனவும், தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும் என ஆர்ஜேடி கட்சியின் தேஜஸ்வி யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
243 இடங்களை கொண்ட பீகார் சட்டசபை தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்தது. நவம்பர் 6ஆம் தேதி முதற்கட்ட தேர்தலும், நவம்பர் 11ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடந்தது. முதல் கட்ட தேர்தலில் 121 தொகுதிகளில் சுமார் 65 சதவீத வாக்குகள் பதிவாகின. இரண்டாம் கட்ட தேர்தல் நடந்த 122 தொகுதிகளில் 67 சதவீத வாக்குகள் பதிவானது.

இதுவரை பீகார் வரலாற்றில் பதிவாகாத வாக்கு எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 66.91% வாக்குகள் பதிவான நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பீகார் மாநிலம் முழுவதும் 46 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
பீகார் வாக்கு எண்ணிக்கை
முதலில் தபால் ஓட்டுகளும் அடுத்ததாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன. தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் படி 243 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் வெளிவந்துள்ளது. அதில் தேசிய ஜனநாயக கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது. பாஜக 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், ஜேடியு 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. இந்த நிலையில் பீகார் வாக்கு எண்ணிக்கையில் சதி நடக்கலாம் எனவும், தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் இருக்கும் தேஜஸ்வி யாதவ் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். வாக்கு எண்ணிக்கையின் போது ஆளும் என்.டி.ஏ. கூட்டணியின் அழுத்தம் காரணமாக சதி நடக்கலாம் என்பதால், தேர்தல் ஆணையம் நடுநிலையைப் பேண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பாட்னாவில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய தேஜஸ்வி யாதவ், தேர்தல் ஆணையம் எந்தத் தரப்பிற்கும் ஆதரவாக இல்லாமல், நாட்டின் ஜனநாயக நம்பிக்கையை காக்கும் வகையில் செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
தேர்தல் ஆணையம்
2020 தேர்தல் நிகழ்வுகளை சுட்டிக் காட்டிய அவர், அந்த தேர்தலில் மகா கூட்டணி அரசை அமைப்பது உறுதி என்ற நிலை இருந்தபோதும், சில அதிகாரிகள், அதிகாரத்தில் உள்ளவர்களின் அழுத்தத்தால் தவறான முடிவுகளை உருவாக்கினார்கள் என குற்றம் சாட்டினார். அந்த அனுபவம் இன்னும் எங்கள் மனதில் ஆழமாக உள்ளது. அதே பிழைகள் இந்த முறை மீண்டும் நடக்கக்கூடாது எனவும் தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
வாக்கு எண்ணிக்கையில் சதி
மேலும், "வாக்கு எண்ணிக்கை அறையிலும், மேசையிலும் என்ன நடக்கிறது என்பதை முழுமையாகவும், வெளிப்படையாகவும் மக்கள் அறிய வேண்டும். ஒவ்வொரு வேட்பாளரின் ஏஜெண்டுகளுக்கும் முறையான அனுமதி வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் தேர்தல் மீது மக்களின் நம்பிக்கை குலைந்துவிடும் எனவும் தேஜஸ்வி கூறியுள்ளார்.
இந்தியா கூட்டணி
இந்தியா கூட்டணியின் கடும் சந்தேகத்திற்கு முக்கியக் காரணமாக வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் ஏற்பட்டுள்ள சில பிரச்சனைகளே காரணம் என்று தகவல்கள் கூறுகின்றன. சில தொகுதிகளில் வாக்குப் பதிவி இயந்திரங்கள் மற்றும் வி.வி.பாட் இயந்திரங்கள் மாற்றப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன, இதற்கு அதிகாரிகள் தகுந்த விளக்கம் அளிக்கவில்லை என்பதே இந்தியா கூட்டணியின் குற்றச்சாட்டாகும்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications