என்ன கொடுமை இது.. ஹாஸ்பிடல் பூட்டிய அறையில் செயல்படாமல் கிடக்கும் வென்டிலேட்டர்கள்.. எங்க தெரியுமா?
பாட்னா: பல்வேறு மாநிலங்கள் வென்டிலேட்டர்கள் இல்லாமல் திண்டாடி வரும் நிலையில், பிகார் மாநிலத்தில் பல்வேறு வென்டிலேட்டர்களை செயல்படாமல் அறையில் பூட்டி வைத்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் 3,00,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளும், 2,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

தொடரும் உயிரிழப்பு
கொரோனா தொற்றின் உயிரிழப்பிலும், பாதிப்பிலும் இந்தியா தற்போது முதலிடத்தில் இருந்து வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலத்தில் மருத்துவமனையில் படுக்கைகள் இல்லை. ஒரு சில இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் கடுமையாக நிலவுகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த ஆண்டு பி.எம் கேர்ஸ் நிதியில் இருந்து பிகார் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட வென்டிலேட்டர்கள் செயல்படாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செயல்படாத வென்டிலேட்டர்கள்
பிகார் மாநிலத்தின் பக்ஸார் மாவட்டத்தில் கொரோனா மீண்டும் எழுச்சி பெற்று வருகிறது. தினமும் 100-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. பக்ஸார் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் 2 வென்டிலேட்டர்கள் செயல்படவில்லை என்றும் அதை இயக்க எந்த தொழில்நுட்ப வல்லுநரும் எங்களிடம் இல்லை எனவும் மாவட்ட மருத்துவ அதிகாரி குமார் தெரிவித்தார்.

பூட்டிய அறையில் கிடக்கின்றன
இதேபோல் அங்கு இருந்து 2 கி.மீ தூரமுள்ள சதர் மருத்துவமனையில் கடந்த ஆண்டு பி.எம் கேர்ஸ் நிதியிலிருந்து கிடைத்த நான்கு வென்டிலேட்டர்கள் இரண்டாவது மாடியில் பூட்டிய அறையில் நீண்ட நாட்களாக கிடக்கின்றன. ''நாங்கள் கடந்த ஆண்டு அவற்றைப் பெற்றோம். ஆனால் எந்தவொரு நிபுணரும் அல்லது மயக்க மருந்து நிபுணரும் இல்லாமல் அவற்றை நாங்கள் இயக்க முடியாது, "என்று சதர் மருத்துவமனையின் மடாக்டர் பூபேந்திர நாத் தி தெரிவித்தார்.

பலரும் கண்டனம்
இந்த 6 வென்டிலேட்டர்களையும் சேர்த்து பல வென்டிலேட்டர்கள் செயல்படாமல் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகின்றன. இதற்கிடையே மாவட்டத்தில் உள்ள நான்கு தனியார் மருத்துவமனைகளில் ஆறு வென்டிலேட்டர்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் செயல்படவில்லை என்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் வைத்து அனைத்து வென்டிலேட்டர்களும் செயல்பட வைக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். பக்ஸார் சுகாதாரத் துறை அமைச்சர் அஸ்வினி சவுபேவின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு மாநிலம் வென்டிலேட்டர்கள் இல்லாமல் திண்டாடி வரும் நிலையில், பிகார் மாநில அரசு இருக்கும் வென்டிலேட்டர்களையும் பூட்டி வைத்து இருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications