தற்கொலை பண்ணிக்க ரயில்வே ட்ராக்குக்கு போனேன்! அப்பறம் என்னாச்சு? ரயில் வரலைனு அங்கயே தூங்கிட்டேன்!
பாட்னா : சிரிப்பதா இல்லை அழுவதா என்பது போல பீகாரில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்து கொள்வதற்காக ரயில்வே டிராக்குக்கு சென்ற இளம் பெண் நீண்ட நேரமாக ரயில் வராததால் அதிலேயே படுத்து தூங்கியுள்ளார். பிறகு ரயிலின் ஓட்டுநர் வந்து அவரை எழுப்பி அனுப்பி வைத்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
பீகார் மாநிலம் மோதிஹரி மாவட்டத்தில் சக்யா ரயில் நிலையம் இருக்கிறது. இந்த ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் மற்றும் சில பாசஞ்சர் ரயில்கள் நின்று செல்லும். இந்நிலையில் அந்த ரயில் நிலையத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்காக தண்டவாளத்திற்கு சென்றிருக்கிறார்.

நீண்ட நேரமாக ரயில் வராத நிலையில் தண்டவாளத்திலேயே படுத்து உள்ளார். ஆனாலும் ரயில் வராத நிலையில் களைப்பில் அப்படியே தண்டவாளத்திற்கு நடுவே தூங்கி விட்டதாக கூறப்படுகிறது. அந்த இளம் பெண் தூங்கிய சிறிது நேரத்திற்கு பிறகு அவ்வழியாக ரயில் ஒன்று வந்துள்ளது.
ரயில் நிலையம் அருகே வந்ததால் ரயில் மிக மெதுவாக வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தூரத்தில் இளம் பெண் ஒருவர் தண்டவாளத்தில் படுத்திருப்பதை பார்த்த ரயிலின் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தியுள்ளார். தொடர்ந்து ரயிலில் இருந்து ஓட்டுநரும் பிற பயணிகளும் இறங்கி வந்து அந்தப் பெண்ணை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போதுதான் அவர் தூங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்தது.
இந்த இடத்தில் தூக்கத்திலிருந்து அந்த இளம் பெண்ணை எழுப்பிய ரயிலின் ஓட்டுநர் அங்கிருந்து செல்லுமாறு கூறினார். ஆனால் அந்த பெண் தான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்னை விடுங்கள் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் அந்த பெண்ணை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வைத்தனர். ஆனாலும் என்ன ஆனாலும் சரி அடுத்த ரயில் வரும்போது நான் தற்கொலை செய்து கொள்வேன் என அந்த பெண் பிடிவாதமாக பேச தொடர்ந்து அங்கிருந்து ரயில் புறப்பட்டது.
தொடர்ந்து அவர் ரயிலில் பாய இளம் பெண் முயற்சிக்கையில் அங்கிருந்த சக பெண்கள் அவரை பிடித்துக் கொண்டனர். இதை எடுத்து அந்த ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். எதற்காக அந்த பெண் தற்கொலை செய்து கொள்ள சென்றார் என்ற காரணம் தெரியாத நிலையில் அவருக்கு மனநல ஆலோசனை வழங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இளம் பெண் தற்கொலைக்கு முயன்ற வீடியோவும், அவரை மீட்ட வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
बिहार के मोतिहारी में रेलवे स्टेशन पर एक लड़की आत्महत्या करने पहुंची और रेलवे ट्रैक पर ट्रेन के इंतजार करते हुए सो गई, ट्रेन ड्राइवर ने समय पर ट्रेन रोककर लड़की को नींद से जगाया, जान बचाई।लड़की ने कहा परीक्षा में असफल होने के कारण वह डिप्रेशन में थी
— BHN News (@bhn_news) September 10, 2024
#RailwayTrack #Biharnews pic.twitter.com/XHGZI9cKzN
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தில் இதேபோல ஒரு பெண் தற்கொலை செய்து கொள்வதற்காக ரயில்வே டிராக்குக்கு சென்று அங்கேயே உறங்கியதும் அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ரயில் பெட்டிகள் சில அவரை கடந்து சென்றதும் குறிப்பிடத்தக்கது. அந்த பெண்ணுக்கும் எந்தவித காயமும் ஏற்படாத நிலையில் அதிகாரிகள் அவரை மீட்டனர்.
*தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 என்ற எண்ணை அழைக்கலாம்..
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications