ராகுல் காந்தி, நீங்க எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்? சிறுவன் கேட்ட கேள்வி
பாட்னா: லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் ராகுல் காந்திக்கு 55 வயது ஆகிறது. அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில் தான் பீகார் சட்டசபை தேர்தலையொட்டி அவர் பிரசாரத்துக்கு சென்றார். அப்போது அவரிடம் சிறுவர் ஒருவர், ‛‛எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்?'' என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு ராகுல் காந்தி அளித்த பதில் கவனம் பெற்றுள்ளது.
பீகார் மாநிலத்தில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து முதற்கட்டமாக நேற்று 121 சட்டசபை தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. மொத்தம் 64.66 சதவீதம் வரை ஓட்டுப்பதிவு பதிவாகி உள்ளது.

இனி 2வது கட்டமாக வரும் 11ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மீதமுள்ள 122 சட்டசபை தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அதன்பிறகு நவம்பர் 14 ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
பீகாரை எடுத்து கொண்டால் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 122 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி பீகாரில் தீவிரமாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அப்போது சிறுவன் ஒருவர் ராகுல் காந்தியிடம்,‛‛நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்?'' என்ற கேள்வியை கேட்டார். அதற்கு ராகுல் காந்தி, ‛‛எனது பணி முடிவடைந்த பிறகு திருமணம் செய்வேன்'' என்றார்.
இதுபற்றி சிறுவன் கூறுகையில், ‛‛எப்போது திருமணம் செய்வீர்கள் என்று ராகுல் காந்தியிடம் கேட்டேன். அதற்கு அவர் தனது பணி முடிவடைந்த பிறகு திருமணம் செய்வதாக கூறினார்'' என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். இருப்பினும், ராகுல் காந்தி எந்த பணியை முடிக்க காத்திருக்கிறார்? என்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications