யாருப்பா இந்த சுயேட்சை.. கட்சிகளை அலறவிட்ட “கேங்ஸ்டர்”.. இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சங்கர் சிங்!
பாட்னா: பீகார் மாநிலம் ரூபாலி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், பாஜக கூட்டணி வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றுள்ளார் சுயேட்சை வேட்பாளர் சங்கர் சிங். யார் இவர்?
நாடு முழுவதும் ஏழு மாநிலங்களில் காலியாக உள்ள 13 சட்டப்பேரவை தொகுதிளுக்கு கடந்த 10 ஆம் தேதி நடந்த இடைத்தேர்தல் வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். பாஜக ஒரே ஒரு இடத்தில் மட்டும் முன்னிலை வகிக்கிறது.

பீகாரில் சுயேட்சை வெற்றி முகம்: பீகார் மாநிலத்தின் ருபாலி சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. மக்களவைத் தேர்தலில் பூர்னியாவில் போட்டியிட்டு தோல்வியடைந்த பீமா பாரதி ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து ஆர்.ஜே.டிக்கு மாறியதால் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. ஐந்து முறை எம்எல்ஏவாகவும், இரண்டு முறை அமைச்சராகவும் இருந்தவர் பீமா பாரதி.
பாஜக கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் கலந்தர் பிரசாத் மண்டல் போட்டியிட்டார். இந்தியா கூட்டணி சார்பில் ஆர்ஜேடி கட்சியின் பீமா பாரதி போட்டியிட்டார். சுயேட்சை வேட்பாளராக களமிறங்கினார் முன்னாள் எம்.எல்.ஏ சங்கர் சிங். இதில் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் சுயேட்சை வேட்பாளர் சங்கர் சிங்.
பூர்னியா கேங்: ஒரு காலத்தில் பீகார் மாநிலம் பூர்னியாவில் தேர்தல்களில் துப்பாக்கிகள் ஏந்திய குண்டர்கள் கும்பல் ஆதிக்கம் செலுத்தியது. வாக்குச்சாவடியை கைப்பற்றுவதும், வாக்காளர்களை மிரட்டுவதும் அவர்களின் வழக்கமாக இருந்தது. கேங்ஸ்டர் கும்பலைச் சேர்ந்த பப்பு யாதவ் 1990களில் தேர்தல் அரசியலில் நுழைந்தார். சுயேட்சையாகவும், கட்சிகளின் ஆதரவுடனும் தொடர்ந்து பல ஆண்டுகள் அங்கு வெற்றியும் பெற்றார் பப்பு யாதவ்.
ஆரம்பத்தில் 'ஷாக்’.. விட்டதை பிடித்த இமாச்சல் காங்கிரஸ் முதலமைச்சரின் மனைவி.. மொத்தமாக சறுக்கிய பாஜக
பப்பு யாதவுக்கு எதிர்க்கோஷ்டி ஒன்றும் அங்கு செயல்பட்டு வந்தது. பூர்னியா பகுதியைச் சேர்ந்த பூட்டன் சிங், “நார்த் லிபரேஷன் ஆர்மி” என்ற பெயரிலான ராஜ்புத் போராளி குழுவுக்கு தலைமை தாங்கி வந்தார். அவர் 2000 ஆம் ஆண்டில் கொல்லப்பட்டதும், அந்தக் குழுவுக்கு தலைமை ஏற்றவர் சங்கர் சிங்.
சங்கர் சிங்: 2005 சட்டமன்ற இடைத்தேர்தலில் தேர்தலில் ராம்விலாஸ் பஸ்வானின் எல்ஜேபி சார்பில் போட்டியிட்டு ருபாலி தொகுதியில் வெற்றி பெற்றார் சங்கர் சிங். பின்னர் துப்பாக்கியை கைவிட்டு முழுநேர அரசியலில் இறங்கினார் சங்கர் சிங்.
சில மாதங்கள் மட்டுமே எம்.எல்.ஏவாக இருந்த நிலையில் 2005 சட்டமன்ற பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்தார். தொடர்ந்து, 2010ல் லோக் ஜனசக்தி சார்பாக ருபாலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். அதன்பிறகு, 2015ல் சுயேட்சையாக போட்டியிட்டு மூன்றாமிடம் பிடித்தார் சங்கர் சிங். 2020 சட்டசபை தேர்தலில் மீண்டும் அங்கு லோக் ஜனசக்தி சார்பாக போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்தார்.
சங்கர் சிங் வெற்றி: இந்த நிலையில் ருபாலி தொகுதி இடைத்தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி சார்பாக ஜேடியு அங்கு போட்டியிட்ட நிலையில், சுயேட்சையாக களமிறங்கினார் சங்கர் சிங். ஆர்.ஜே.டி சார்பில் முன்னாள் ஜேடியு அமைச்சரும், எம்.எல்.ஏவுமான பீமா பார்தியும், ஜேடியு சார்பாக கலாதர் மண்டலும் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே, ஜேடியு வேட்பாளருக்கு டஃப் கொடுத்து வந்த சுயேட்சை வேட்பாளர் சங்கர் சிங், அடுத்தடுத்த சுற்றுகளில் முன்னிலை பெற்று தற்போது வெற்றி முகத்தை எட்டியுள்ளார். மொத்தம் வாக்கு எண்ணிக்கை முடிவில் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார் சுயேட்சை வேட்பாளர் சங்கர் சிங்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications