வெறும் 20 நாளில் நடந்த அதிசயம்.. 19 வயது தில்லாலங்கடி மச்சக்காரன்.. டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்.. கொடுமை
பாட்னா: பீகாரில் நடந்த ஒரு சம்பவத்தை கேள்விப்பட்டு, அம்மாநில மக்கள் பலரும் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லையாம்.. அப்படி என்ன நடந்தது?
பீகார் மாநிலம், ஜமுய் மாவட்டத்தில் உள்ளது அக்ஷரா என்ற கிராம்.. இங்கு வினோத் குமார் என்ற 19 வயது இளைஞர் வசித்து வருகிறார்.. டிஜே-வாக பணிபுரிந்து வருகிறார்..

எனவே, சோஷியல் மீடியாவில் எந்நேரமும் ஆக்டிவ்வாக இருந்து வந்துள்ளார்.. அப்போதுதான் ஃபேஸ்புக்கில் பிரீத்தி குமாரி என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இந்த பெண், அங்கிருக்கும் நவ்கடிக் என்ற கிராமத்தை சேர்ந்தவர்..
கல்யாணம்: ஆனால், இப்பெண்ணுக்கு ஏற்கெனவே கல்யாணமாகிவிட்டது.. ஒரு குழந்தையும் இருக்கிறது.. இந்த விஷயம் தெரிந்தும் பிரீத்தியை விரும்பினார் வினோத்.. அந்த பெண்ணும், தனக்கு கல்யாணமாகி குழந்தை இருந்தும்கூட, தன்னைவிட வயதுகுறைந்த வினோத்தை விரும்பினார்.. இருவருமே தீவிரமாக காதலித்து வந்தனர்.
ஒருநாள், பிரீத்தியை நேரில் சந்திக்க முடிவு செய்தார் வினோத்.. இதற்காக, கடந்த ஏப்ரல் 22ம் தேதி, பிரீத்தியின் வீட்டிற்குள் ரகசியமாக நுழைந்துள்ளார்.. ஆனால், அப்போதுதான் வினோத்துக்கு ட்விஸ்ட் காத்திருந்தது.. கிராம மக்கள் வினோத்தை பார்த்துவிட்டார்கள். வேறு கிராமத்தை சேர்ந்த நபர், பிரீத்தி வீட்டிற்குள் ஏன் திருட்டுத்தனமாக செல்ல வேண்டும் என்று சந்தேகப்பட்டு பின்னாடியே வந்துள்ளனர். பிரீத்தி வீட்டிலேயே, வினோத்தை கையும் களவுமாக பிடித்துவிட்டனர்.
ஊர்மக்கள்: இதையடுத்து, பிரீத்தி, வினோத் இருவரையுமே ஊர்மக்கள் அங்குள்ள கோயிலுக்கு அழைத்து சென்று, வலுக்கட்டாயமாக பிரீத்திக்கு தாலி கட்ட சொன்னார்கள்.. வினோத்தும் பிரீத்துக்கு தாலி கட்டி மனைவியாக ஏற்றுக்கொண்டார்.. இப்போது, திருமணம் முடிந்ததால், பிரீத்தியை வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு வினோத்திடம் ஊர்மக்கள் சொன்னார்கள்.. இதனால் வேறுவழி தெரியாமல், பிரீத்தியை தன்னுடனேயே வீட்டுக்கு அழைத்து வந்தார் வினோத்.
ஆனால், அங்கேதான் பிரீத்திக்கும் ட்விஸ்ட் காத்திருந்தது.. இந்த 19 வயது வினோத்துக்கு ஏற்கெனவே வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது... கிரிஜா குமாரி என்ற பாடகியையுடன் நெருக்கமாக வாழ்ந்து வந்துள்ளா வினோத். இப்போது பிரீத்தி ஒருபக்கம், கிரிஜா குமாரி மறுபக்கம் என 2 பெண்களுடனும் தொடர்பில் இருந்து வந்துள்ளார்..
வினோத்: இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, கிரிஜாகுமாரி வீட்டிற்கும் ரகசியமாக சென்றிருக்கிறார் வினோத்.. அந்த கிராமத்தினரும் வினோத்தை கையும் களவுமாக பிடித்துவிட்டார்கள.. இவர்களும், இந்த ஜோடிக்கு ஏற்கனவே கோயிலில் வலுக்கட்டாயமாக கல்யாணத்தை செய்து வைத்தார்கள். அதாவது, பிரீத்திக்கு கோயிலில் தாலி கட்டி, வெறும் 20 நாட்கள் ஆன நிலையில், கிரிஜா குமாரிக்கும் கோயிலில் தாலி கட்டினார் வினோத்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரீத்தி, வினோத்தை நம்பி குழந்தைகள், குடும்பத்தை விட்டுவிட்டு வந்துவிட்டோமே என்று கலங்கி அழுதார்.. உடனே மலாய்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று முறையிட்டார்.. இதையடுத்து போலீசாரும், பிரீத்தி, கிரிஜாகுமாரி, வினோத் என 3 பேரையுமே அழைத்து விசாரித்தனர்.
ஆட்சேபணை: அப்போது, பிரீத்தியுடன் வினோத் வாழ்வதில் தனக்கு எந்த பிரச்சனையும், ஆட்சேபணையும் இல்லை என்று கிரிஜா குமாரி சொன்னார்.. இதையடுத்து போலீஸார் அனைவரையும் அங்கிருந்து அனுப்பி வைத்துவிட்டனர்... இந்த சம்பவம் தொடர்பாக எழுத்துப் பூர்வமாக யாருமே புகார் தராததால், அவர்களின் சம்மதம் பேரில் அறிவுறுத்தி அனுப்பி வைத்ததாக போலீசார் சொல்கிறார்கள்.
ஆனால், வெறும் 20 நாளில், 19 வயது இளைஞருக்கு 2 கல்யாணம் நடந்த சம்பவத்தை கேட்டு, கல்யாணமாகாத சில 90'ஸ் கிட்ஸ்களுக்கு காதில் புகை வந்து கொண்டிருக்கிறதாம்...!!












Click it and Unblock the Notifications