பீகாரின் தவெக, நாதக யார்? பி.கே.வால் யாருக்கு பிரச்சனை? ஓட்டை பிரித்த ஓவைசி? பரபர பாலிடிக்ஸ்!

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பிகார் சட்டப்பேரவை தேர்தலில் எப்போதும் போல இந்த முறையும் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) மற்றும் மகாகூட்டணி (மகாபந்தன்) ஆகிய இரு முக்கிய அணிகளுக்குள் நேரடி போட்டி நிலவியது. தற்போது என்.டி.ஏ. வெற்று பெற்றிருக்கும் நிலையில், இந்த இரு அணிகளையும் விட தனித்துப் போட்டியிடும் பல்வேறு கட்சிகளின் வருகை தேர்தல் போட்டியை சற்று விறுவிறுப்பாக்கியுள்ளது. குறிப்பாக, பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ், அசாதுதீன் ஓவைசி தலைமையிலான AIMIM, மாயாவதி தலைமையிலான பிஎஸ்பி, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆகியவை அனைத்தும் தனிப்பட்ட செல்வாக்குடன் களமிறங்கியுள்ளன.

ஜன் சூரஜ் உள்ளிட்ட கட்சிகள் பெரும்பான்மையான தொகுதிகளில் வெல்லாது என்றாலும், பிரதான கூட்டணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் "vote cutter" சக்திகளாக பார்க்கப்படுகின்றன. பீகார் அரசியலின் சமூகநிலை, ஜாதி அடிப்படையிலான வாக்கு வங்கி, மண்டல அளவிலான ஆதிக்கம் போன்ற காரணிகள் இந்த கட்சிகளுக்கு சில தொகுதிகளில் போட்டியை கடுமையாக்க கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Bihar Election 2025 2025 Bihar Election Results 2025 2025

பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் இந்த முறை புதிய கட்சியாக களமிறங்கியுள்ளது. கிராமங்களை நேரடியாகச் சந்தித்து, மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து நடத்திய பாதயாத்திரை பிரசாந்த் கிஷோருக்கு சில மாவட்டங்களில் கணிசமான வரவேற்பைக் பெற்றுக் கொடுத்துள்ளது

பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ்

மேற்கு சாம்பரன், சாரண், சிவான், பகுதிகளில் இளம் வாக்காளர்கள் மற்றும் சமூக மாற்றத்தை விரும்பும் வாக்காளர்களிடையே ஜன் சுராஜ் நன்றாக பலம் பெற்றுள்ளது. பெரிய தொகுதிகளை வெல்லாவிட்டாலும், மகாபந்தனின் வாக்கு வங்கியில் பிளவை உண்டாக்கும் வல்லமை பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் உள்ளது.

ஏஐஎம்ஐஎம்

அதேபோல், ஓவைசியின் AIMIM கட்சி சிமாஞ்சி பிராந்தியத்திலுள்ள கிஷன்கஞ்ச், அரேரியா, பூரணியா, கடிஹார் ஆகிய தொகுதிகளில் வலுவாக உள்ளது. முஸ்லிம் வாக்கு வங்கி அதிக ஆதிக்கம் கொண்ட இந்த பகுதிகளில் AIMIM கடந்த தேர்தலிலேயே வெற்றி பெற்று தன்னுடைய நிலையை நிரூபித்தது. இந்த முறை AIMIM போட்டியிடும் பல தொகுதிகளில் மகாபந்தனின் ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணிக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் உள்ளது.

பிஎஸ்பி தலித் வாக்கு

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி (BSP) மாநிலத்தின் தலித் வாக்காளர்களை குறிவைத்து களமிறங்கியுள்ளது. பீகாரில் தலித் வாக்கு பாரம்பரியமாக என்.டி.ஏ. அல்லது ஆர்ஜேடி அணிகளுக்குள் பிரிந்து இருந்தாலும், வட பீகார் மற்றும் சில மத்திய பீகார் பகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியை சற்று சுறுசுறுப்பாக்கும் நிலை காணப்படுகிறது.

ஆம் ஆத்மி கட்சி

ஆம் ஆத்மி கட்சி (AAP) மாநிலம் முழுவதும் பெரிய அளவிலான தாக்கம் செலுத்தும் கட்சியாக இல்லாதபோதிலும், நகர்ப்புற படித்தவர்கள், அரசு வேலைக்கு தயாராகும் இளைஞர்கள் போன்றோரிடம் ஒரு சிறிய ஆதரவை பெற்று உள்ளது. பாட்னா, கயா, நாலந்தா போன்ற மாவட்டங்களில் குறைந்த வாக்குகள் இருந்தாலும், சில நெருக்கடியான நேரங்களில், தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) மற்றும் மகாகூட்டணி (மகாபந்தன்) ஆகிய இரு முக்கிய அணிகளின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் சூழல் உள்ளது.

வாக்கு பிளவு

மொத்தத்தில், இந்த மூன்றாம் சக்திகளின் எழுச்சி நேரடியாக ஆட்சியை தீர்மானிக்காது என்றாலும், 10-20 தொகுதிகளில் இவை ஏற்படுத்தும் வாக்கு பிரிப்பு, பெரிய அணிகளின் வெற்றி, தோல்விக்கு காரணமாக மாறக் கூடும் வாய்ப்பு உள்ளது. ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணிக்கு, AIMIM மற்றும் ஜன் சுராஜ் அதிக சவால் தரக்கூடிய கட்சிகளாகவும், என்.டி.ஏ அணிக்கு பிஎஸ்பி மற்றும் சில பகுதிகளில் ஆம் ஆத்மி பிரச்சனை தரும் கட்சிகளாக இருக்கும் என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+