ஒரே நேரத்தில் 1000 பேருக்கு வேலை போச்சு.. காரணம் இந்த AI தான்.. பேடிஎம் நிறுவனத்தில் என்ன நடக்கிறது
டெல்லி: ஏஐ காரணமாக வேலையிழப்பு ஏற்படும் என்று பலரும் எச்சரித்து வந்த நிலையில், இந்தியாவிலேயே அது நடந்துள்ளது. பேடிஎம் நிறுவனம் சுமார் 1000 பேரைப் பணி நீக்கம் செய்துள்ளது.
இந்தாண்டு நமது உலகில் நடந்த மிகப் பெரிய மாற்றம் என்றால் அது ஏஐ மாடல்கள் தான். கடந்த காலங்களில் இல்லாத ஏஐ மாடல்கள் வந்துள்ளது என்ற போதிலும், இந்தளவுக்கு வலிமையான ஏஐ மாடல்களை நாம் பார்த்தே இல்லை.

சாட் ஜிபிடி ஏஐ மாடல் அடைந்த வெற்றி என்பது மற்ற ஏஐ நிறுவனங்களுக்கு ஒரு ஊக்கமாக அமைந்துள்ளது. அதைத் தொடர்ந்து சுகாதாரம், பிஸ்னஸ், டெக் என பல்வேறு துறைகளில் புது ஏஐ மாடல்கள் வெளியாகின.
ஏஐ: இந்த ஏஐ மாடல்கள் மூலம் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. நமது வேலைகளை எளிதாகவும் வேகமாகவும் மாற்றுகிறது. இது நிச்சயம் மனிதக் குலத்தை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகமே இல்லை. அதேநேரம் ஏஐ மாடல்களால் ஆபத்துகளும் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
வேலையிழப்பு: குறிப்பாக ஏஐ மாடல்களால் மிகப் பெரியளவில் வேலையிழப்பு ஏற்படும் என்றும் ஏஐ உருவாக்கும் வேலைகள் அனைவருக்கும் போதுமானதாக இருக்காது என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இந்த வேலையிழப்புகள் எங்கோ ஏதோ ஒரு மூலையில் நடப்பது இல்லை. நமது நாட்டிலேயே ஏஐ மாடல்களால் வேலையிழப்பு என்பது ஆரம்பித்துவிட்டது.
பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் என்ற அந்த நிறுவனம் செலவுகளைக் குறைக்கப் பல பிரிவுகளில் குறைந்தது 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை பேடிஎம் செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். ஆப்ரேஷன் மற்றும் மார்கெட்டிங் பிரிவில் ஆட்குறைப்பு நடந்துள்ளது.
என்ன வேலைகள்: டிஜிட்டல் பணம் செலுத்தும் நிறுவனங்கள் இப்போது தங்கள் செயல்பாடுகளுக்கு ஏஐ மாடல்களை இணைக்க ஆரம்பித்துள்ளன. மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தைச் செய்யும் வேலைகளில் இருக்கும் நபர்களை நீக்கிவிட்டு அதை ஏஐ டூல் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்த பேடிஎம் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
ஏஐ ஆட்டோமேஷன்: இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "ஏஐ ஆட்டோமேஷன் நோக்கி நாங்கள் நகர்கிறோம். திரும்பத் திரும்ப செய்யும் பணிகளை மாற்றி அமைப்பதே எங்கள் திட்டம், இதன் மூலம் செலவுகளைக் குறைத்து எங்கள் செயல்திறனை அதிகரிக்க முடிகிறது. இதன் மூலம் ஊழியர்கள் செலவினத்தில் 10-15 சதவீதத்தைச் சேமிக்க முடியும்.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ஏஐ மாடல் இந்தளவுக்குப் பலனைத் தரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. இது மட்டுமின்றி முறையாக வேலை செய்தவர்களையும் நாங்கள் தொடர்ந்து மதிப்பீடு செய்து அவர்களை நீக்குவதையும் வாடிக்கையாக வைத்துள்ளோம்" என்றார்.
பேடிஎம் நிறுவனரும் சிஇஓவுமான விஜய் சேகர் ஷர்மா, தொடர்ச்சியாக மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் ஏஐ கருவிகளைப் பயன்படுத்தி வருகிறார். இதனால் ஆட்குறைப்பு வரும் காலத்திலும் தொடரும் என்றே தெரிகிறது. கடந்த 2021ஆம் ஆண்டில், பேடிஎம் நிறுவனம் சுமார் 500-700 ஊழியர்களை அடிப்படையில் பணிநீக்கம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. பேடிஎம் நிறுவனம் இப்போது பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், செலவுகளைக் குறைப்பது கட்டாயமாகுகிறது.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications