முதல்வர் யாரை காப்பாற்ற நினைக்கிறார்.. திமுகவிற்கு இந்து ஓட்டு வேண்டாமா.. ஆவேசமான பாஜக விஜயசாந்தி
முதல்வர் ஸ்டாலினுக்கு விஜயசாந்தி கேள்வி எழுப்பி உள்ளார்
பெரம்பலுார்: "அரியலூர் மாணவிக்கு நடந்த இந்த சம்பவம் நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்... ஏன் முதல்வர் இந்த விவகாரம் குறித்து பேசவில்லை? முதல்வர் ஏன் மவுனமாக உள்ளார்? இந்துக்கள் ஓட்டு வேண்டாமா?. மாணவி இறப்புக்கு மதமாற்ற காரணம் இல்லை என திசை திருப்புகின்றனர்" என்று பாஜகவின் விஜயசாந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
அரியலுார் மாவட்டம், வடுகபாளையம் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி, தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டியில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் விஷம் குடித்து கடந்த 19-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்... மதம் மாற கட்டாயப்படுத்தியது, ஹாஸ்டாலில் தன்னை அதிக வேலை வாங்கியது என்ற இருவேறு காரணங்கள் மாணவியின் தற்கொலைக்கு காரணமாக சொல்லப்பட்டு வருகின்றன...

பாஜக
இது சம்பந்தமான தொடர் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கம் மாணவியின் தற்கொலை விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது.. இறந்துபோன மாணவிக்கு நீதி வேண்டும் என்று கேட்டு தொடர்ந்து போராட்டத்தையும் நடத்தி வருகின்றது... இதனிடையே, மாணவியின் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க மதுரை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது..

விஜயசாந்தி
மாணவியின் மரணம் குறித்து நேரில் விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட, மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த சந்தியா ரே எம்பி, தெலுங்கானாவை சேர்ந்த விஜயசாந்தி, மகாராஷ்டிராவை சேர்ந்த சித்ரா தாய் வாக் , கர்நாடகா கீதா விவேகானந்தா ஆகியோர் அடங்கிய குழுவை, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அமைத்திருந்தார். இந்த குழுவானது, மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக அவர்களது வீட்டில் நேரில் விசாரணை நடத்தியது.. அந்த விசாரணைக்கு பிறகு தெலுங்கானா முன்னாள் எம்பியும், நடிகையுமான விஜயசாந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்..

மதமாற்றம் காரணமா?
அப்போது அவர் சொன்னதாவது: "மாணவியின் தற்கொலை மிகவும் வருத்தம் தருகிறது.. மதத்தை மாற்றக்கோரி யாரையும் கட்டாயப்படுத்த கூடாது... ஒன்றரை வருடங்களுக்கு மேலாகவே மதம் மாற சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது... ஆனால் கடைசி வரை மாணவி மதம் மாறமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்துள்ளார்... இந்த விவகாரத்தில் பாஜக மதத்தை வைத்து ஓட்டு வாங்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை... மாணவி இறப்பதற்கு முன்பு பேசிய வீடியோவை இந்த தமிழ்நாடே பார்த்தது.. மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதால் தான் அந்த மாணவி இறந்துள்ளார்...

மதமாற்றம்
மாணவிக்கு நடந்த இந்தச் சம்பவம் நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்... ஆனால், ஏன் முதல்வர் இந்த விவகாரம் குறித்து பேசவில்லை? முதல்வர் ஏன் அமைதியாக இருக்கிறார்.. இந்துக்கள் ஓட்டு வேண்டாமா?.. மாணவி இறப்புக்கு மதமாற்ற காரணம் இல்லை என்று திசை திருப்புகிறார்கள்.. இந்த சம்பவம் இனிமேல் நாளை யாருக்கும் நடந்துவிடக்கூடாது.. மாணவி தற்கொலை குறித்து முதல்வர் பேசாமலேயே உள்ளார்.. முதல்வர் யாரை காப்பாற்ற நினைக்கிறார் என்று தெரியவில்லை..

திமுக
வழக்கம்போல் திமுக மாறாமல் அப்படியே தான் இருக்கிறது.. மாணவிக்கு நியாயம் ஏன் தரவில்லை... இறந்த மாணவியின் தந்தை 25 ஆண்டுகளாக திமுகவின் தொண்டராக இருந்திருக்கிறார்.. ஆனால், அவருக்கே அந்த கட்சியில் நியாயம் இல்லை. ஏன் மாதமாற கட்டாயப்படுத்துகின்றனர்? வீடியோவில் மாணவிதான் பேசியுள்ளார்.. இந்த விவகாரத்தை பெரிதாக்குவதால் பாஜகவிற்கு ஒன்றும் இல்லை... இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா?

ஒரு கோடி ரூபாய்
பாஜக யாரையும் தூண்டி விடவில்லை... மாணவி தற்கொலைக்கு காரணமான பள்ளி நிர்வாகி இதுவரை கைது செய்யப்பட்டவில்லை... மாணவி தற்கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படாவிட்டால் நாடு முழுக்க போராட்டம் வெடிக்கும்... மாணவி குடும்பத்திற்கு இழப்பீடாக தமிழக அரசு ஒரு கோடி தரவேண்டும்... வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும். மாணவி விவகாரத்தில் யாரும் அரசியல் பண்ணவில்லை. மாணவி பேசிய வீடியோ பொய்யா? குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்றார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications