பெரம்பலூரில் அதிமுக பிரச்சாரம்… பட்டாசு வெடித்ததில் டீக்கடை தீக்கிரையானது
பெரம்பலூர்: அதிமுக பிரச்சாரத்தின் போது பட்டாசு வெடித்ததில் டீக்கடை மற்றும் 6 குடிசை வீடுகள் எரிந்து நாசமானது.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சந்திரசேகர், பெரம்பலூர் மாவட்டத்தில் சித்தளி, கீழப்பெரம்பலூர் உள்ளிட்ட கிராமங்களில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவருடன் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாச்சலம் உள்ளிட்டோர் இருந்தனர். கீழப்பெரம்பலூர் கிராமத்தில் ஓட்டு சேகரிக்க சென்ற வேட்பாளரை வரவேற்க அக்கிராமத்தைச் சேர்ந்த அதிமுகவினர் பட்டாசு வெடித்தனர்.
அப்போது அருகில் இருந்த டீக்கடையில் பட்டாசு நெருப்பு சிதறி விழுந்தது. இதில் திடீரென கடை தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கு பரவியது.
இதில், அருகில் இருந்த 6 குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. வீட்டில் இருந்த டிவி, கிரைண்டர், வீட்டு உபயோக பொருட்கள் என எரிந்து நாசமாகின.
இதுகுறித்து தகவலறிந்து வந்த திட்டக்குடி தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர்












Click it and Unblock the Notifications