புதுவையில் டாட்டூ குத்திய மகனின் முக்கிய நரம்புக்கு என்ன நடந்தது .. தந்தை கண்ணீர் பேட்டி
பெரம்பலூர்: டாட்டூ குத்திய கல்லூரி மாணவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து அவருடைய தந்தை பேட்டி அளித்துள்ளார்.
பெரம்பலூரை சேர்ந்தவர் பரத் (22). கல்லூரி மாணவரான இவர் தனது நண்பர்களுடன் 20 நாட்களுக்கு முன்பு புதுவைக்கு சென்றுள்ளார். அங்கு கடற்கரை, அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தார்.

ஒரு நாள் புதுச்சேரி கடை வீதியில் நண்பர்களுடன் சென்ற போது பச்சை குத்தும் கடையை பார்த்துள்ளார். அவருக்கு பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. இதையடுத்து அங்கு தனது கழுத்து பகுதியில் நங்கூரம் படத்தை டாட்டூவாக போடுமாறு அதன் மாதிரியையும் காட்டினார்.
டாட்டூ போட்டுக் கொண்டு ஊர் திரும்பிய பரத்திற்கு டாட்டூ குத்திய பகுதியில் புண் ஏற்பட்டுள்ளது. அத்துடன் நரம்பு பாதிக்கப்பட்டதுடன் கையின் அக்குள் பகுதியில் நெரிகட்டிக் கொண்டது. இதனால் வலி தாங்க முடியாமல் தவித்த அவரை பெற்றோர் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சீழ்பிடித்திருந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அகற்றிவிட்டனர். இதையடுத்து அவரது உடல்நிலை மோசமடைந்தது. அங்கிருந்த மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரத்தை பரிசோதித்த மருத்துவர்கள், டாட்டூ குத்தியதால் அந்த இடத்தில் ரத்தத்தில் உள்ள தட்டை அணுக்களின் (பிளேட்லெட்) எண்ணிக்கை குறைந்துவிட்டது.
அவருக்கு குறைந்த ரத்த அழுத்தமும் ஏற்பட்டிருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியும் இல்லை. இதனால் அவரது உடல் தற்போது சிகிச்சைக்கு ஒத்துழைக்காது என தெரிவித்துவிட்டனர். இதையடுத்து பரத் தஞ்சை மருத்துவமனையில் பரத் உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருடன் டாட்டூ குத்திக் கொண்ட மற்ற நண்பர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து பரத்தின் தந்தை பழனிசாமி கூறுகையில், டாட்டூ மையில் இருந்த ரசாயனம் முக்கிய நரம்பில் இறங்கியதால் பரத் பாதிக்கப்பட்டார் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications