பெரம்பலூர் நிமிருது.. அரியலூர் அதிருது.. இன்று மாலை 4 மணிக்கு ரெடியா இருங்க! வருமான வரித்துறை அதிரடி
பெரம்பலூர்: பெரம்பலூர்-அரியலூர் ஆகிய 2 மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் மற்றும் பொது மக்களுக்கு வருமான வரித்துறை தரப்பிலிருந்து அழைப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் வருமான வரி விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படியே இப்போதும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த கூட்டம் நடந்து வருகிறது.
சந்தேகங்கள்: தொழில் வணிக துறையினரிடம் வருமான வரி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வரி செலுத்துவோரின் சேவைகளுக்காக மத்திய நேரடி வரிகள் வாரியம் எடுத்துள்ள புதிய முயற்சிகள், டிஜிட்டல் யூகத்தில் வரி செலுத்துவோரின் பங்கு மற்றும் கடமைகள் குறித்து விளக்கவும் இந்த கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கமாகும். இதில் வருமான வரி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு வருமான வரித்துறை தரப்பில் பதிலளிக்கப்படும்.

4 நாட்களுக்குமுன்புகூட, வருமான வரித்துறை தலைமை கமிஷனர் சஞ்சய் ராய் இதுகுறித்து ஒருகூட்டத்தில் சொல்லும்போது, ''வரி செலுத்துவோர் தங்களுக்கான ஆண்டுத்தகவல் அறிக்கை தரவுகளை சரிபார்த்துக் கொள்வது அவசியம். வரி செலுத்துவதை கடமையாக மட்டுமல்லாமல் பெருமையாகவும் நினைக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
அரியலூர்: அந்தவகையில், பெரம்பலூரில் வருமான வரித்துறை சார்பில் இன்று 12ம் தேதி விழிப்புணர்வு கூட்டம் நடக்க போகிறது.. இதில் கலந்து கொள்வதற்காக பெரம்பலூர்-அரியலூர் ஆகிய 2 மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் மற்றும் பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி வருமானவரித்துறை துணை ஆணையர் கருப்பசாமி பாண்டியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :
வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வருமான வரி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வரி செலுத்துவது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் எடுத்துள்ள புதிய முயற்சிகள், இணைய வழி செயல்பாடுகள், வரி செலுத்துவதில் ஏற்பட்டுள்ள மேம்பாடு மற்றும் வரி செலுத்துவோரின் பங்கு, கடமைகள் குறித்து விளக்கும் வகையிலும் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சந்தேகங்கள்: பெரம்பலூர் அஸ்வின் கூட்ட அரங்கில் இன்று (12ஆம் தேதி) மாலை 4 மணிக்கு இந்த விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் வருமான வரி செலுத்துதல் தொடர்புடைய சந்தேகங்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு துணை ஆணையர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.
எனவே பெரம்பலூர் வருமான வரி சரகத்துக்கு உட்பட்ட பெரம்பலூர், அரியலூர் ஆகிய இரண்டு மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த வரி செலுத்துவோர், வணிகர்கள், பட்டய கணக்காளர்கள், வரி ஆலோசகர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என திருச்சி வருமான வரித்துறை துணை ஆணையர் கருப்பசாமி பாண்டியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications