வேப்பந்தட்டை வேத மாரியம்மன் கோயில் திருவிழா.. தேரோட்டம் குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பெரம்பலூர்: நூற்றாண்டு பழமையான வேத மாரியம்மன் கோயில் திருவிழாவில் தேரோட்டத்தில் பிரச்சனை எழுந்ததையடுத்து, இந்த ஆண்டு தேர் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்குள் செல்ல வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தில் இந்த வேத மாரியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. கடந்த 1993ம் ஆண்டு இந்த கோயில் முதல் முறையாக தேர் திருவிழா நடைபெற்றது.

இதனையடுத்து இரு பிரிவினர்களுக்கு இடையே பிரச்சனை அதிகரித்ததால் தொடர்ந்து 32 ஆண்டுகளாக திருவிழா நடக்காமல் இருந்தது. பிறகு இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பிரச்சனை பேசி தீர்க்கப்பட்டு, கடந்த ஆண்டு தேர் திருவிழா விமர்சையாக நடந்தது. இந்த ஆண்டும் அதேபோல திருவிழா நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரச்சனை மீண்டும் வெடித்தது. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் இரு பிரிவினருக்கும் தேரில் சம உரிமை வழங்கப்பட வேண்டும்.
தங்கள் தெருக்களிலும் தேர் வர வேண்டும் என்று ஒரு தரப்பினர் உரிமை கோரினர். இதனையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் தரப்பில் இரு தரப்பினர் இடையே சமாதானம் பேசப்பட்டது. ஆனால் இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனையடுத்து இப்பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கு காரணமாக இந்த ஆண்டு கோயில் திருவிழா நடக்கவில்லை.
திருவிழா நாளில் ஒரு தரப்பினர் தேர் வேண்டும் என்றும், இன்னொரு தரப்பினர் தேர் வந்தால் எங்கள் வீதிகளுக்கும் வர வேண்டும் எனவும் கோரினர். இதனையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தேர் பட்டியல் இன சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் போக வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications