பெரம்பலூரில்.. கணக்கு டீச்சரை காணோமாமே.. சயின்ஸ் வாத்தியாரும் மிஸ்ஸிங்.. அந்த காருக்குள் பார்த்தால்?
பெரம்பலூர்: கணக்கு டீச்சரையும் காணோமாம்.. சயின்ஸ் வாத்தியாரையும் காணோமாம்.. ஒரே நேரத்தில், ஒன்றாக மிஸ் ஆகியிருக்கிறார்கள்.. 2 பேரையுமே தனித்தனியாக போலீசார் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் டீச்சரின் நிலைமைதான் மிகவும் கவலைக்குள்ளாக்கி உள்ளது.
கோவை உக்கடம் ராமர் கோவில் அருகே ஒரு காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு பின்பக்கம், கடந்த வாரம், 3 நாட்களாக ஒரு கார் அனாதையாக நின்று கொண்டிருந்தது..

சந்தேகம்: இதனால், சந்தேகம் அடைந்த பொதுமக்கள் பெகடை வீதி போலீசாருக்கு இதுகுறித்து தகவல் வந்தனர்.. போலீசாரும் விரைந்து வந்து, அந்த காரை சோதனையிட்டதில், காருக்குள் நிறைய ரத்தக்கறை படிந்திருந்தது... ஒரு சுத்தியல், ஒரு போர்வை, ஒரு துண்டு போன்றவை காருக்குள் இருந்திருக்கின்றன. இதில், சுத்தியலில், மட்டும் ரத்தக்கறை படிந்திருக்கிறது.
இதையடுத்து போலீசார், அந்த கார் யாருடையது என்ற விசாரணையில் இறங்கினர்.. அப்போதுதான், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான கார் என்பது தெரியவந்தது... ஆனால், பாலமுருகனின மனைவி தீபாவை சில நாட்களாகவே காணோமாம்.. இவர் ஒரு டீச்சர்.
பெரம்பலூர்: தன் பள்ளியிலேயே ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 17-ந் தேதி வழக்கம்போல் காரில், ஸ்கூலுக்கு சென்றிருக்கிறார்.. ஆனால், அதன்பிறகு வீடு திரும்பவில்லை.. இதனால், மனைவியை காணோம் என்று அவரது கணவர் போலீசில் புகார் தந்தார். பெரம்பலூர் போலீசாரும் மாயமான தீபாவை தேடி வந்தனர். இப்படிப்பட்ட சூழலில்தான், கோவையில் தீபாவின் கார் அனாதையாக நின்றது தெரியவந்துள்ளது.
சம்பவத்தன்று தீபா, ஸ்கூலுக்கு போகவில்லை.. அன்றைய தினம், யாரா ஒரு ஆசிரியரும் தீபாவுடன் வந்ததாக கூறப்படுகிறது. தீபா வேலைபார்க்கும் அதே ஸ்கூலில்தான், இந்த ஆசிரியரும் வேலைபார்க்கிறாராம்.. தீபா காணாமல் போன அதே நாளில்தான், அந்த ஆசிரியரும் காணாமல் போயுள்ளார். எனவே, 2 பேரையுமே போலீசார் தேட ஆரம்பித்தனர்.
சந்தேகங்கள்: ஆனாலும், தீபா வந்த காரில் ரத்தக்கறை நிறைய உள்ளதால், போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுப்பியது.. தீபாவுக்கும், அந்த ஆசிரியருக்கும் எதாவது தகராறு ஏற்பட்டிருக்குமா? அப்போது அவர்களுக்குள் தாக்கிக் கொண்டதில், காரில் ரத்தக்கறை ஏற்பட்டதா? அல்லது இந்த ரத்தக்கறைக்கு என்ன காரணம்? என்றெல்லாம் பல சந்தேகங்கள் எழுந்தன.
சுத்தியலில் ரத்தக்கறை இருந்ததால், ஒருவேளை தீபாவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்குமோ என்றும் சந்தேகம் எழுந்தன. இதை கண்டுபிடிக்கவே, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
விசாரணை: இந்த வழக்கை பெரம்பலூர் போலீசார் விசாரித்து வருவதால், கோவை மாநகர போலீசாருக்கு அவர்களுக்கும் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். பெரம்பலூர் போலீசார் கோவையிலேயே முகாமிட்டு விசாரணையை விரைவுப்படுத்தி உள்ளனர்.. மாயமான தீபா டீச்சருக்கு 42 வயதாகிறது.. பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணக்கு டீச்சராக உள்ளார்.. இவர் ஒரு மாற்றுத்திறனாளியும் கூட.
இவரது கணவர் பாலமுருகன் இன்ஜினியராக இருக்கிறார்.. அவரது காரைதான், பள்ளிக்கு செல்ல பயன்படுத்துவாராம்.. இதே பள்ளியில், பணியாற்றும் அந்த ஆசிரியர் பெயர் வெங்கடேசன்.. 44 வயதாகிறது.. அறிவியல் ஆசிரியராக உள்ளார். 2 பேருக்கும் கள்ளக்காதல் இருந்ததாக தெரிகிறது.. தீபாவின் கணவர் புகார் தந்ததுபோலவே, சயின்ஸ் வாத்தியார் வீட்டிலும், அவர் மாயமானதாக புகார் தந்தனர்.. இதனால், வி.களத்தூர் போலீசார் ஆசிரியரை தேடி வந்தனர்.
மோகன்: இந்நிலையில்தான், கோவையில் மோகன் என்பவர் சிக்கினார்.. இவர் ஒரு பாலியல் புரோக்கர்.. இவருக்கு சயின்ஸ் வாத்தியார் போன் செய்தபோது, வசமாக புரோக்கர் சிக்கிவிட்டார். ஆனால், சயின்ஸ் வாத்தியார் இன்னும் கிடைக்கவில்லை.
எப்போதுமே இந்த சயின்ஸ் வாத்தியார், தன்னுடைய சிம்கார்டுகளை அடிக்கடி மாற்றிக் கொண்டேயிருப்பாராம்.. அதேபோல, தான் பதுங்கி இருக்கும் இடத்தையும் மாற்றிக் கொண்டேயிருப்பாராம். தலைமறைவாக உள்ள ஆசிரியர் வெங்கடேசன் தொடர்பு கொண்டு பேசும் எண்களின் உரிமையாளர்களிடம் போலீசார் விசாரித்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாருமே பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
சயின்ஸ் டீச்சர்: அதாவது, சயின்ஸ் வாத்தியார் பாலியல் பெண்களுடன் அடிக்கடி உல்லாசமாக இருப்பாராம். இதற்காக ஏடிஎம்களில் பணத்தை எடுத்து, அந்த பெண்களுக்கு செலவு செய்து, உல்லாசமாக இருப்பாராம்.
அந்தவகையில், மதுரை, தேனி, கோவை உள்ளிட்ட இடங்களில் ஏடிஎம்களில் சமீபத்தில்கூட வெங்கடேசன் பணம் எடுத்திருக்கிறார்.. அங்கிருக்கும் சிசிடிவி கேமராக்களில் ஆசிரியர் வெங்கடேசன் முகம் பதிவாகியிருக்கிறது.
இப்போதுகூட அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.. அடிக்கடி இடத்தை மாற்றி வருவதால், அவரை நெருங்குவதில், நிறைய சிக்கல்கள் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.. சயின்ஸ் வாத்தியாரை பிடித்தால்தான், கணக்கு டீச்சரின் நிலைமை என்ன ஆனது என்றே தெரியவரும்.. அதனால், போலீசார் ஆசிரியர் வெங்கடேசனை பிடிக்க மும்முரம் காட்டிவருகிறார்கள்..!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications