பெரம்பலூர் பிரவீனா..அதெப்படி கையில் மட்டும்? ரிஸ்க் எடுத்தும் சிக்கிட்டாரே.. மோகத்தில் வீழ்ந்த கணவன்
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே காதலுக்கு இடையூறாக இருந்த நர்சிங் மாணவியை கூலிப்படையை ஏவி கணவனே வெட்டிக்கொன்றது அம்பலமாகி உள்ளது.
பெரம்பலூர் அருகேயுள்ளது எளம்பலூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் ராஜ்குமார்.. 33 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் பிரவீனா.. 24 வயதாகிறது.. ராஜ்குமாரின் மாமா மகள்தான் இந்த பிரவீனா. இவர்களுக்கு சர்வேஷ்வரன்(5), யோகித்(3) என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள்.

ராஜ்குமார் பெரம்பலூர் அருகில் ஒரு தனியார் டயர் பேக்டரியில் வேலை பார்த்து வருகிறார். பிரவீனா பெரம்பலூரில் உள்ள தனியார் நர்சிங் காலேஜில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.
கள்ளக்காதலி: இந்நிலையில், ராஜ்குமாருக்கும், இன்னொரு பெண்ணிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.. இதனால், இவர்கள் 2 பேரும் அடிக்கடி ஜாலியாக ஊர் சுற்றி வந்தனர்.. ஒருகட்டத்தில் அந்த பெண்ணை விட்டு, ராஜ்குமாரால் இருக்க முடியவில்லை. அதனால், மனைவியை விட்டுவிட்டு, வீட்டை விட்டே போய்விட்டார்.. ஆனால், மறுபடியும் திரும்பி வந்தார்.. பிறகு மறுபடியும் ஓடிவிட்டார்.. இப்படி 2 முறை அந்த பெண்ணிடம் ஓடிப்போயிருக்கிறார்.
ஒவ்வொருமுறையும், குடும்பத்தினர் ராஜ்குமாருக்கு அட்வைஸ் தந்தும், வார்னிங் தந்தும் வந்துள்ளனர்.. 2 குழந்தைகள் இருப்பதால், அவர்களுக்காக தம்பதி இருவரையும் சேர்ந்து வாழும்படியும் சொன்னார்கள். அப்போதும், அந்த பெண்ணையே ராஜ்குமாரின் மனம் நாடியது.. இதனால், தம்பதி இடையே நாளுக்கு நாள் பிரச்சனை அதிகமானது.
விடுமுறை: ஆயுத பூஜையையொட்டி, கடந்த 21ம் தேதி முதல் ஸ்கூலுக்கு லீவு என்பதால், பிள்ளைகள் 2 பேரும், சிறுவயலூரில் உள்ள பிரவீனாவின் அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார்கள். வீட்டில் பிரவீனா மட்டும் இருந்துள்ளார். நேற்றுமுன்தினம் ராஜ்குமாருக்கு நைட் டியூட்டி இருந்துள்ளதால், 9.45 மணிக்கு வேலைக்கு கிளம்பி உள்ளார். அப்போது போகும்போது, வழியில் உள்ள உறவினர் வீட்டில் இறக்கிவிடுவதாகவும், நைட் நேரத்தில் வீட்டில் தனியாக இருக்க வேண்டாம் என்றும் சொல்லி பைக்கில் அழைத்து சென்றிருக்கிறார்.
ஹைவேஸில் இருவரும் சென்று கொண்டிருந்தபோது, திடீரென அடையாளம் தெரியாத 4 பேர் வழிமறித்து 2 பேரையுமே அரிவாளால் வெட்டினர்... இதில் தன்னுடைய கையில் வெட்டுப்பட்ட நிலையில், சொந்தக்காரர்களை போன் போட்டு, சம்பவ இடத்துக்கு வரவழைத்தார் ராஜ்குமார்.. அவர்கள் வந்து பார்ப்பதற்குள், பிரவீனா இறந்துவிட்டார்..
படுகாயம்: ரத்த காயத்துடன் விழுந்து கிடந்த ராஜ்குமார், எங்க 2 பேரையும் வெட்டிவிட்டு மர்மநபர்கள் ஓடிவிட்டார்கள் என்று கதறி அழுதுகொண்டே சொன்னார். அதற்குள் போலீசாரும் விரைந்து வந்து, சடலத்தை மீட்டனர்.. காயமடைந்த ராஜ்குமாரையும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்..
ஆனால், தம்பதிகளை வழிமறித்த கும்பல், பிரவீனாவை மட்டும் கொடூரமாக கொன்றுவிட்டு, ராஜ்குமாரை லேசான காயத்துடன் எப்படி விட்டுச்சென்றது? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது. பிறகு, ராஜ்குமாரிடமே விசாரணை ஆரம்பமானது.
உளறல்: ஆனால், போலீசாரின் கேள்விகளுக்கு, உளற ஆரம்பித்தார் ராஜ்குமார்.. கள்ளக்காதலியுடன் நெருக்கமாக இருக்க, மனைவி குறுக்கே நிற்பதால்தான், ஆளை வைத்து கொன்றதாகவும், சந்தேகம் வராமல் இருக்க, தன்னுடைய கையில் தானே வெட்டிக்கொண்டதாகவும், வாக்குமூலம் தந்தார். இப்போது, சிகிச்சை நடப்பதால், அது முடிந்ததுமே ராஜ்குமாரை போலீசார் சிறையில் அடைப்பார்கள் என்று தெரிகிறது.. அதேபோல, ராஜ்குமார் செட்டப் செய்த அந்த மர்மநபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
சொந்தக்காரர்கள் பலமுறை அறிவுறுத்தியும் கேட்காமல், 2 முறை மனைவியையும் தவிக்கவிட்டு ஓடிப்போய், இன்று மனைவியையே கொல்லும் அளவுக்கு ராஜ்குமார் ரிஸ்க் எடுத்திருக்கிறார் என்றால், அப்படிப்பட்ட கள்ளக்காதலி யாராக இருக்கும்???












Click it and Unblock the Notifications