Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டாட்டூ குத்தியதால் கல்லூரி மாணவர் மரணம்.. டாட்டூ பிரியர்களுக்கு எச்சரிக்கை.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்: நீங்கள் டாட்டூ பிரியாக இருந்தால், நிச்சயம் இந்த செய்தி ஒரு எச்சரிக்கை பதிவு ஆகும். பரத் என்ற கல்லூரி மாணவர் டாட்டூ போட்டதால், புண் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவருக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த பரத் கடந்த 20 நாட்களுக்கு முன் தனது நண்பர்களுடன் பாண்டிச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்தவர், புதுச்சேரி கடை வீதியில் பச்சை குத்தும் கடைக்கு சென்று தனது கழுத்து பகுதியில் நங்கூரம் படத்தை டாட்டூ குத்திக் கொண்டிருக்கிறார்.

Permbalur College student who died due to tattooing: What happened?

சுற்றுலா முடிந்து சொந்த ஊர் திரும்பிய பரத் வயல் வெளியில் விவசாய பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் பச்சை குத்திய பகுதியில் புண் ஏற்பட்டு நரம்பு பாதிக்கப்பட்டு அவரது அக்குள் பகுதியில் நெரிக்கட்டியிருக்கிறது.

ஒரு கட்டத்தில் பரத்திற்கு கழுத்தில் கட்டி பெரிதாகி கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.இதையடுத்து பரத்தை அவரது குடும்பத்தார் அவரை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்துள்ளனர். அங்கு சீழ்பிடித்திருந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

இந்நிலையில் அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பரத்தை மேல் சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

அங்கு பரத்தை பரிசோதித்த மருத்துவர்கள், டாட்டூ குத்தியதால் ஏற்பட்ட உடல் பாதிப்பில் ரத்தத்தில் உள்ள தட்டை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது. இதனால் அவருக்கு குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது, இவரது தற்போதைய உடல்நிலை சிகிச்சையை ஏற்காது எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் சிகிச்சை பலனின்றி தஞ்சை தனியார் மருத்துவமனையிலேயே பரத் உயிரிழந்துள்ளார்.

டாட்டூ கலைஞர்கள் அலார்ட்: இதனிடையே சர்க்கரை நோய் பாதிப்பு, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் 'டாட்டூ' குத்திக்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் டாட்டூவால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு தோல் நோய் மருத்துவரை உடனடியாக பார்க்க வேண்டும் என்றும் டாட்டூ கலைஞர்கள் எச்சரிக்கிறார்கள்.

மருத்துவர்கள் வார்னிங்: இதனிடையே மருத்துவர்கள் கூறும் போது, டாட்டூக்களில் பயன்படுத்தப்படும் ரசாயன மைகளால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு அதிகம். மேலும் நோய் தொற்று பாதிப்புகள் ஏற்படக்கூடும். குறிப்பாக, காசநோய், பால்வினை நோய், எய்ட்ஸ் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தோலில் தழும்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது என்றும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+