அடுத்தடுத்து சிக்கும் அரசு ஊழியர்கள்.. கடலூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் அதிரடியாக கைது
கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள தொரவலூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் என்ற விவசாயி, தனக்கு சொந்தமான நிலத்தை அளந்து அத்து காட்டுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். பின்னர், இது தொடர்பாக அவர், தொரவலூர் கிராம நிர்வாக அலுவலர் தனசேகரை அணுகி உள்ளார். அப்போது வேலாயுதத்தின் நிலத்தை அளந்து அத்து காட்ட, தனசேகர் தனக்கு லஞ்சமாக ரூ.10 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தனசேகர் கையும் களவுமாக சிக்கி கைதாகி உள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள தொரவலூர் கிராமத்தை சேர்ந்த 68 வயதாகும் வேலாயுதம் என்பவர் அந்த பகுதியில் விவசாயம் செய்து வரும் விவசாயி ஆவார். விவசாயி வேலாயுதம் தனக்கு சொந்தமான நிலத்தை அளந்து அத்து காட்டுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். பின்னர், இது தொடர்பாக அவர், தொரவலூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் பண்ருட்டி எல்.ஆர்.புரத்தை சேர்ந்த தனசேகர் (33) என்பவரை அணுகியிருக்கிறார்.

அப்போது வேலாயுதத்தின் நிலத்தை அளந்து அத்து காட்ட, தனசேகர் தனக்கு லஞ்சமாக ரூ.10 ஆயிரம் தர வேண்டும் என கூறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே லஞ்சம் கொடுக்க விரும்பாத வேலாயுதம், உடனே கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கூறிய அறிவுரையின்படி நேற்று வேலாயுதம் ரசாயன பொடி தடவிய ரூ.10 ஆயிரத்தை, தொரவலூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்த தனசேகரிடம் கொடுத்திருக்கிறார். அப்போது அந்த பணத்தை வாங்கிய போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பிஎ சத்தியராஜ் தலைமையிலான போலீசார், கிராம நிர்வாக அலுவலர் தனசேகரை கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவத்தால் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வீட்டிற்கு நகராட்சியில் ரசீது போடுவதற்காக பெரம்பலூர் நகராட்சி வருவாய் ஆய்வாளரான புதுக்கோட்டை மாவட்டம், சின்ன அய்யன் வயல் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் ரூ.25 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் புகாரின் பேரில் நகராட்சி வருவாய் ஆய்வாளர் கண்ணனை பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அடுத்தடுத்து கடந்த சில நாட்களாகவே அரசு அதிகாரிகள் கையும் களவுமாக சிக்கி கைதாகி வருகிறார்கள். ஒரே நாளில் இரண்டு பேர் வெவ்வேறு இடங்களில் கைதாகி உள்ளனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications