பெரம்பலூரை தட்டி தூக்கிய திமுக! பாஜக டெபாசிட் இழந்தது! அருண் நேருவுக்கு பிரம்மாண்ட வெற்றி- யார் இவர்
பெரம்பலூர்: லோக்சபா தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அருண் நேரு 3,89,107 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். யார் இவர்.. பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இதில் தமிழ்நாட்டில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி பெற்றி பெற்றது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது முதலில் ஓரிரு தொகுதிகளில் திமுக கூட்டணி பின்னடைவைச் சந்தித்த போதிலும் இறுதியில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வென்றது.
அருண் நேரு: இதில் பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அருண் நேரு மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.. இந்தத் தேர்தலில் அருண் நேரு 6,03,209 வாக்குகளைப் பெற்று 3,89,107 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு எதிராகப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 2,14,102 மட்டுமே பெற்றார். இதில் பாஜக சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிட்ட ஐஜேகேவின் பாரிவேந்தர் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
மிகப் பெரிய வெற்றியை அருண் நேரு பதிவு செய்துள்ள நிலையில், யார் இவர் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.. இந்த அருண் நேரு வேறு யாரும் இல்லை திமுக அமைச்சரான கேஎன் நேருவின் மகன் தான்.. 40 வயதான இவர் அமெரிக்காவின் இல்லினாய்ஸில் உள்ள பிராட்லி பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவரது மனைவி தீபிகா மருத்துவராக இருக்கிறார்.
படிப்பு: கல்லூரி படிப்பை முடித்து இந்தியா திரும்பிய இவர் அதன்பிறகு, விவசாயம் மற்றும் அரிசி ஆலை நிர்வாகம் உள்ளிட்ட தொழில்களைக் கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் திமுகவில் இருந்தாலும் அவர் எந்த பொறுப்பிலும் இல்லை. மேலும், அவர் லோக்சபா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்படும் வரை நேரடி அரசியலிலும் ஈடுபட்டதில்லை.
திருச்சி அரசியல்: இருப்பினும், திருச்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே கே.என்.நேருவின் நிழலாகவே இருந்துள்ளார். கட்சி மற்றும் நிர்வாகம் சார்ந்து நேரு சார்பில் பல விஷயங்களை இவரே கவனித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் கடந்த லோக்சபா அல்லது தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் சமயத்திலேயே இவர் வேட்பாளராகக் களமிறக்கப்படலாம் என்று சொல்லப்பட்டது. இருப்பினும், அப்போது அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை. அதன் பின்னரே இந்த முறை அவருக்கு வாய்ப்பு தரப்பட்டது.
சொத்து மதிப்பு, கடன் விவரம்: வேட்புமனு தாக்கல் செய்த போதே அருண் தனது சொத்து விவரம் கிரிமினல் வழக்கு தொடர்பான விவரங்களைப் பகிர்ந்து இருந்தார். அதன்படி அவர் மீது எந்த கிரிமினல் வழக்கும் நிலுவையில் இல்லை.. மேலும் இதுவரை அவர் எந்த கிரிமினல் வழக்கிலும் தண்டிக்கப்படவில்லை. அவரது வருமானத்தின் ஆதாரமாக பிஸ்னஸ், முதலீடுகள் மற்றும் விவசாயம் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அவர் தனது சொத்து மதிப்பு ₹46.20 கோடி என்றும் மனைவி தீபிகாவின் சொத்து மதிப்பு ₹83.47 லட்சம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.. மேலும், அவரது அசையா சொத்துகளின் தற்போதைய சந்தை மதிப்பு ₹29.06 கோடியாகவும், அவரது மனைவியின் அசையா சொத்துக்களின் மதிப்பு ₹25 லட்சமாகவும் உள்ளதாகக் கூறியிருந்தார். வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் தனக்கு மொத்தம் ₹19.13 கோடி கடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications