அது என்ன.. சீனிவாசன் முதல் பிரேமலதா வரை பாமக விஷயத்திலேயே உளறி கொட்டி வருகிறார்கள்?!
பாமக வேட்பாளருக்கு பிரச்சாரம் மேற்கொண்டபோது பிரேமலதா தவறான தகவலை குறிப்பிட்டார்.
Recommended Video

சென்னை: அது என்ன பாமக விஷயத்திலேயே கட்சி தலைவர்கள் சுற்றி சுற்றி வந்து வம்பை இழுத்துவிட்டு போகிறார்கள்?
ஒரு தொகுதியில் மத்திய மாநில அரசுகள் என்னென்ன பணிகளை செய்து முடித்துள்ளன.. மக்களுக்கான சேவைகள் இன்னும் எவ்வளவு செயல்படாமல் உள்ளது என்பதெல்லாம் தெரியாமலேயே கட்சி தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
போன தேர்தலில் பிரேமலதாவின் பிரச்சார பேச்சை கேட்டு பாராட்டியவர் பிரதமர் மோடி. ஆனால் இந்த முறை சோடை போனதுடன், தவறான மற்றும் சர்ச்சை தகவல்களை வெளியிட்டு வருகிறார்.
கேப்டனுக்கு பிடிச்ச பாட்டு எது, அது எந்த படம் என்று கூட தெரியாமல் எதையோ சொல்லிவிட்டு போகிறார் பிரேமலதா.

சிபி ராதாகிருஷ்ணன்
கோவையில் சிபி ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்தபோது, பிரேமலதா, புல்வாமா தாக்குதலை நடத்தியவர் பிரதமர் தான் உளறிக் கொட்டியதால், கட்சி நிர்வாகிகள், மற்றும் கூட்டணி கட்சியினர் அடைந்த ஷாக்கில் இருந்து இன்னும் மீளவில்லை.

வைத்தியலிங்கம்
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுாரில் பாமக வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, பிரேமலதா "தாம்பரத்தை மையமாக வைத்து, தனி ரயில் முனையம் உருவாக்கப்படும்" என்றார். இதைக் கேட்டதும் கூட்டத்தில் இருந்தவர்கள் சலசலத்தனர். எதனால் இந்த திடீர் சலசலப்பு என்றுகூட பிரேமலதா கொஞ்சமும் கவலைப்படவில்லை.

துவங்கிவிட்டது
விஷயம் என்னவென்றால், தாம்பரத்தில் இந்த ரயில் முனையம் ஏற்கனவே திறந்து வைச்சாச்சாம்.. அதுவும் 40 கோடி செலவில் இந்த புதிய ரயில் முனையத்தை ரயில்வே இணை அமைச்சரே துவக்கி வைத்துவிட்டு போய் இருக்கிறார்.

பழைய கோரிக்கை
இப்படி ஒரு ரயில் முனையத்தை திறந்து வைத்து ஒரு வருடம் ஆகிறது. இந்த நிலையில் ஏற்கனவே ரயில் முனையம் இருப்பது கூட தெரியாமல், பழைய கோரிக்கையையே திரும்பவும் முழக்கமிட்டு சென்றுவிட்டது மக்களுக்கு மட்டுமல்லாமல்.. பாமக தொண்டர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாம்!
அது என்ன.. திண்டுக்கல் சீனிவாசன் முதல் பிரேமலதா வரை பாமக விஷயத்திலேயே உளறி கொட்டி வருகிறார்கள்?!
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications