பட்டதாரி பெண் கொலையில் திடீர் திருப்பம்.. 17 வயது சிறுவன் பலாத்காரம்.. புதுவையில் பரபரப்பு
புதுவை: புதுச்சேரியில் திருமணமாக இருந்த இளம் பட்டதாரி பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக 17 வயது சிறுவன் பலாத்காரம் செய்து கொலை செய்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி கொசபாளையத்தைச் சேர்ந்தவர் அம்சபிரபா. கடந்த 18 ஆம் தேதி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இச்சம்பவம் தொடர்பாக உடலை கைப்பற்றிய உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
முதலில் தற்கொலை வழக்காக பதிவு செய்த காவல் துறையினர் பிரேத பரிசோதனை அறிக்கையில் பலாத்காரம் செய்யப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததை அடுத்து கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸார்
இதையடுத்து அம்சபிரபாவின் வீட்டின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது அம்சபிரபா வீட்டிலிருந்து ஒரு சிறுவன் போவதையும் அம்சபிரபாவிடம் பேசுவதையும் சிறிது நேரம் கழித்து வெளியே வருவதையும் பார்த்தனர்.

மாடியில் கல்லால் அடித்தேன்
இதையடுத்து அந்த சிறுவன் அவ்வப்போது அம்சபிரபாவின் வீட்டு மாடியில் புறா பிடிக்க வந்த 17 வயது சிறுவன் என தெரியவந்தது. அவனை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது சிறுவன் அளித்த வாக்குமூலத்தில் புறா பிடிக்க வரும்போது அம்ச பிரபா தன்னை ஒருமையில் திட்டியதால் ஆத்திரமடைந்து மாடியிலிருந்து கல்லால் அடித்தேன்.

சுடிதார்
அப்போது அவருக்கு அடிப்பட்டு மயங்கி விழுந்தார். பின்னர் மாடியிலிருந்து அவரை தூக்கிக் கொண்டு அறையில் படுக்க வைத்தேன். அந்த நேரம் அவர் அணிந்திருந்த சுடிதார் விலகியிருந்ததால் சபலம் அடைந்தேன்.

கைது
இதனால் அவரை பலாத்காரம் செய்தேன். இந்த விஷயத்தை அம்சபிரபா வெளியே சொல்லக் கூடாது என்பதற்காக அவரது கழுத்தை நெரித்தேன் என வாக்குமூலம் அளித்தார். அந்த சிறுவன் ஆசாரி வேலை செய்து வருகிறான். இதையடுத்து அவனை போலீஸார் கைது செய்தனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications