புதுவை.. சங்கராபரணி ஆற்றில் மீன் பிடிக்க சென்று நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி
புதுவை: புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள சங்கராபரணி ஆற்றில் மீன் பிடிக்க சென்றபோது நீரில் மூழ்கிய 2 சிறுவர்கள் உயிரிழந்துவிட்டனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே உறுவையாறு வெங்கட்டா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மகன் ராமு (18). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜின் மகன் தேவகுரு (11), உறுவையாறு நத்தமேடு பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (9), பாகூர் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த ஹரிகரபிரியன்(13) ஆகிய 4 பேரும் வில்லியனூர் ஆச்சாரியாபுரம் பகுதியில் சங்கராபரணி ஆற்றுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அப்போது ராமு ஆற்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தார். மீன் அகப்படாத நிலையில் தேவகுரு, சஞ்சய், ஹரிகரபிரியன் ஆகிய 3 பேரும் ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர்.

கரை
ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற அவர்கள் சேற்றில் சிக்கிக் கொண்டு நீரில் மூழ்கினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமு ஆற்றில் குதித்து தேவகுரு, ஹரிகரபிரியன் ஆகிய இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.

மயக்க நிலை
அதில் ஹரிகரபிரியன் மயக்க நிலையில் இருந்தார். சஞ்சய் மாயமானார். இதையடுத்து ராமு அங்கிருந்தவர்கள் உதவியுடன் ஹரிகரபிரியனை வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சஞ்சய்
பின்னர் இது தொடர்பாக மங்கலம் போலீஸார் மற்றும் வில்லியனூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மாயமான சஞ்சயை தேடிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

மருத்துவக் கல்லூரி
இதையடுத்து ஹரிகரபிரியன், சஞ்சய் ஆகிய இருவரின் உடலையும் போலீஸார் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து மங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications