வீட்டில் அடைபட்ட 16 வயது சிறுமி! ‘வந்து’ போன புதுச்சேரி புள்ளிகள்! தொக்காய் சிக்கிய 25.. யார் யார்?
புதுச்சேரி : புதுச்சேரியில் வாடகை வீட்டில் வைத்து காஞ்சிபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த புரோக்கர் உள்ளிட்ட 25 பேரை போலீஸார் கைது செய்துள்ள நிலையில், மேலும் பலரை போலீசார் தேடி வருவதாக வெளியாகியுள்ள தகவல் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மோகன் நகரில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக கோரிமேடு டிநகர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 13-ம் தேதி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீஸார் சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 2 பேரை பிடித்த போலீஸார், இளம்பெண் ஒருவரையும் மீட்டனர்.

பாலியல் தொழில்
விசாரணையில், பிடிபட்டவர்கள் கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்த புரோக்கர் பால்ராஜ் (எ) பாலாஜி, வாடிக்கையாளராக வந்திருந்த புதுச்சேரியைச் சேர்ந்த பச்சையப்பன் ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் மீட்கப்பட்ட பெண் காஞ்சிபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுமி என்பதும், அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரிந்தது.

16 வயது சிறுமி
இதையடுத்து மீட்கப்பட்ட சிறுமியை போலீஸார் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இது தொடர்பாக போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்து புரோக்கர் பாலாஜி, பச்சையப்பன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து பாலியல் தொழில் நடந்த வீட்டில் சிக்கிய செல்போன் உள்ளிட்ட ஆவணங்கள் மூலம் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

25 பேர் கைது
அப்போது 38 நபர்கள் வரை அச்சிறுமியிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது உறுதியானது. இதனையடுத்து அவர்களின் பட்டியலை சேகரித்த போலீஸார் தனிப்படை அமைத்து கைது நடவடிக்கையில் இறங்கினர். அதன்பேரில் இதுவரை 25 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அதன்படி புதுச்சேரியைச் சேர்ந்த சுரேஷ், பிரேம்குமார், தாரா ராம், அருள்குமார், ரஞ்சித், ஜெயப்பிரகாஷ், சதீஷ்குமார், பாலாஜி, சிலம்பரசன், சத்தியபாலன், சாரதி, சங்கர், மணிகண்டன், கவியரசன், வினோத்குமார், சசீந்திரன், சரவணன், ஜெகதீஷ், செல்வகணபதி, கடலூர் சேது உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசியல் புள்ளிகள்?
இவர்கள் அனைவரும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள புரோக்கர் பாலாஜியின் மனைவி உமா, சுபீந்திரன், கரிகாலன், ஜெகன், ராஜா உள்ளிட்ட பலரை தேடி வருகின்றனர். மேலும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோருக்கு இதில் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாகவும் போலீஸார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
-
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- காவல் துறை விளக்கம் -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications