புதுவையில் மேலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா - பாதிப்பு 21 ஆக அதிகரிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரது மனைவி, மகள் மற்றும் அவரது நண்பர் உள்ளிட்ட 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி அருகே நெட்டப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த அரும்பார்த்தபுரம் திருக்குறளார் நகரைச் சேர்ந்த 36 வயதுடைய நபருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு புதுச்சேரி அரசின் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அவர் வசித்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு, அவரது குடும்ப உறுப்பினர்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், அவருடன் தொழிற்சாலையில் பணிபுரிந்த சக ஊழியர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருடைய 32 வயதுடைய மனைவி, 9 வயது மகள் மற்றும் நெட்டப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அவருடைய நண்பர் என 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் மூன்று பேருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறாத நிலையில், கொரோனா உறுதி செய்யப்பட்ட அந்த நபருக்கு எங்கிருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவியது என சுகாதாரத்துறை விசாரணை நடத்தியதில், அந்த நபர் தொழிற்சாலையில் பணி நேரம் போக, மீதமுள்ள நேரத்தில் வீட்டின் அருகே காய்கறிகளை விற்று வந்துள்ளார்.

இதற்காக அவர் அவ்வப்போது கோயம்பேடு காய்கறி சந்தைகுக்கு சென்று வந்ததும், கோயம்பேடு சந்தை மூலமே அந்த நபருக்கு கொரோனா வைரஸ் பரவியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரைக்கும் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் 9 பேர் ஏற்கனவே சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர். மேலும் தற்போது புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 7 பேரும் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் என மொத்தம் 12 பேர் ஜிப்மர் மற்றும் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications