ஆபத்தாக மாறிய ஆனந்தகுளியல்.. புதுச்சேரி கடலில் மாயமான 4 பேர்.. இழுத்து சென்ற ராட்சத அலை - சோகம்
புதுச்சேரி: புதுச்சேரி பழைய துறைமுகம் கடலில் இன்று குளித்த 2 சிறுமிகள் உள்பட 4 பேர் மாயமாகினர். திடீரென்று வந்த ராட்சத அலையில் அவர்கள் சிக்கிய நிலையில் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று நள்ளிரவு 12 மணிக்கு 2023ம் ஆண்டு விடைபெற்று 2024 புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மக்கள் தயாராகி வருகின்றனர். பொதுவாக புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு என்பது களைகட்டும்.

அங்கு புதுச்சேரி மட்டுமின்றி தமிழ்நாடு உள்பட பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் இன்று இரவு புத்தாண்டு கொண்டாட ஏராளமானவர்கள் புதுச்சேரியில் குவிந்து வருகின்றனர்.
இதற்கிடையே தான் புத்தாண்டு கொண்டாட வரும் மக்களின் பாதுகாப்பு தேவையான ஏற்பாடுகளை புதுச்சேரி அரசு செய்துள்ளது. இரவு நேரங்களில் சிலர் மதுபானம் அருந்தி கடலில் குளிப்பதால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் கடல்பகுதிக்குள் மக்கள் செல்லாமல் தடுக்கும் வகையில் பந்தல் கம்புகளால் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் கூட இன்று புதுச்சேரி பழைய துறைமுகம் கடலில் 2 சிறுமிகள், 2 சிறுவர்கள் கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது திடீரென்று வந்த ராட்சத அலையில் அவர்கள் 4 பேரும் சிக்கி கெண்டனர். இதையடுத்து அவர்கள் 4 பேரும் கடலுக்குள் மாயமாகினர். இதுபற்றி அறிந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் அவர்கள் 4 பேரையும் தேடும் பணியை தொடங்கி உள்ளனர்.
மேலும் கடலுக்குள் மூழ்கிய நிலையில் மீனவர்களும் அவர்கள் 4 பேரின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டம் இன்று இரவு நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பே கடலில் குளித்த 2 சிறுவர்கள், 2 சிறுமிகள் என 4 பேரை அலை இழுத்து சென்றது புதுச்சேரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications