மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதூர்.. 2026 ஜனவரியிலேயே சென்னைக்கு ஜாக்பாட்.. மத்திய அரசு அதிரடி முடிவு
புதுச்சேரி: சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே அமைக்கப்பட்டு வரும் 4 வழிச்சாலை பணியில் 10 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்தச் சாலை பயன்பாட்டுக்கு வந்தால் சென்னை நகரம் மிகுந்த பயன் பெறும். சென்னை - பெங்களூரு விரைவு சாலையால் 2 மணி நேரத்தில் பெங்களூரு செல்ல முடியும். இதைத்தவிர ரூ.600 கோடி மதிப்பில் மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதூருக்கு இடையிலான 6 வழிச்சாலைக்கு ஜனவரி 2026-ல் ஒப்புதல் அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி நேற்று புதுச்சேரி வந்தார். புதுச்சேரியில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், ராஜீவ் காந்தி - இந்திரா காந்தி சிக்னல்களை இணைக்கும் வகையில் ரூ.436 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கப்பட இருக்கிறது.. இந்த திட்டத்திற்கு நிதின் கட்காரி அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்வில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசும் போது, உலக அளவில் சிறந்த தொழில்நுட்பங்களை எல்லாம் பயன்படுத்தியதன் மூலம், நம் நாட்டின் நெடுஞ்சாலை இணைப்பு உலகத்தில் முதலிடத்தில் இருப்பதாக கூறினார்.. நாடு முழுவதும் உள்ள நகராட்சிகளில் உருவாகும் குப்பைகளை மறுசுழற்சி செய்து, சாலைகள் போடுவதற்குப் பயன்படுத்த திட்டமிட்ருப்பதாவும், ஏற்கெனவே டெல்லியில் குப்பையை பயன்படுத்தி சாலைகள் போடப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
இதுவரை இந்தியாவில் சாலை உருவாக்கத்தில் 18 லட்சம்டன் கழிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய நிதின் கட்காரி, சாலைகள் போடுவதற்காக ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் மணல் எடுப்பதால் நீர் ஆதாரம் பாதுகாக்கப்படுவதாக தெரிவித்தார். மத்திய நீர்வளத் துறை அமைச்சராக தான் பொறுப்பு வகித்த போது, மாநிலங்களுக்கு இடையே நீர் பங்கீடு தொடர்பாக 24 வழக்குகள் நிலுவையில் இருந்தாகவும், அதில் கலந்தாய்வு கூட்டம் நடத்தி 17 வழக்குகளில் தீர்வு ஏற்பட்டது என்றும் கூறினார்.
உலக அளவில் நம் நாடு பொருளாதார வளர்ச்சியில் 4-வது இடத்தில் இருக்கிறது. இதை 3-வது இடத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி பெரும் முயற்சி எடுத்து வருவதாகவும் நிதின் கட்காரி தெரிவித்தார்.
தமிழகம் குறித்து நிதின் கட்காரி நேற்றைய கூட்டத்தில் பேசுகையில், "ஆட்டோமொபைல் துறையை பொறுத்தவரை கடந்த 2014-ம் ஆண்டில் ரூ.14 லட்சம் கோடியாக இருந்த வளர்ச்சி 2025-ம் ஆண்டில் ரூ.22 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. நம் நாட்டில் வாகன உற்பத்தியில் தற்போது 30 சதவீதம் பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.. ஹைட்ரஜன் அடிப்படையில் இயங்கும் இன்ஜினை அடிப்படையாகக் கொண்டதாக எதிர்காலம் இருக்கும். அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் துறையாக இது இருக்க போகிறது.
தமிழகத்தில் இருந்து இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் இருந்து 50 சதவீத வாகனங்கள் ஏற்றுமதியாகிறது. அதாவது தயாரிக்கப்படும் வாகனங்களில் பாதிக்கு பாதி ஏற்றுமதியாகிறது. சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே அமைக்கப்பட்டு வரும் 4 வழிச்சாலை பணியில் 10 சதவீதம் நிறைவடைந்திருக்கிறது. இந்தச் சாலை பயன்பாட்டு வந்தால் சென்னை நகரம் மிகுந்த பயன் பெறும்.
சென்னை - பெங்களூரு விரைவு சாலையால் 2 மணி நேரத்தில் பெங்களூரு போக முடியம். இதைத்தவிர ரூ.600 கோடி மதிப்பில் மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதூருக்கு இடையிலான 6 வழிச்சாலைக்கு ஜனவரி 2026-ல் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம் சென்னை துறைமுகத்துக்கு இணைப்பு எளிதாக கிடைக்கும்" நிதின் கட்காரி கூறினார்.
மதுரவாயல் ஸ்ரீபெரும்புதூர் இடையே ஆறு வழிச்சாலையை பொறுத்தவரை பெரும்பாலும் உயர்மட்ட மேம்பாலமாக அமைக்கப்பட உள்ளது.
இதன நீளம் சுமார் 23 முதல் 24 கி.மீ நீளம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சாலை போடப்பட்டால் பெங்களூரில் இருந்து சென்னைக்கு மிக வேகமாக வந்துவிட முடியும். பெங்களூர், ஓசூர், வேலூர், சித்தூர், ராணிப்பேட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து விரைவாக துறைமுகத்தை அடைய முடியும். இதன் மூலம் அங்கு தொழில் வளர்ச்சி மேம்படும் என்பதால் இந்த சாலை குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications