மனைவியுடன் பேசிக் கொண்டே பரோட்டா சாப்பிட்ட கணவர்.. தொண்டையில் சிக்கி பரிதாப மரணம்
பரோட்டா தொண்டையில் அடைத்து புது மாப்பிள்ளை உயிரிழந்தார்
புதுச்சேரி: புது பொண்டாட்டியோட செல்போனில் பேசிக் கொண்டே பரோட்டா சாப்பிட்டார் மாப்பிள்ளை.. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் தொண்டையில் சிக்கி உயிரிழந்து விட்டார்.
புதுச்சேரி, லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர், புருஷோத்தமன். இவருக்கு 37 வயதாகிறது. தனியார் கார் கம்பெனியில் சூபர்வைசராக இருக்கிறார். இவருக்கு 6 மாசத்துக்கு முன்னாடி தான் கல்யாணம் ஆனது.

மனைவி பெயர் சண்முகசுந்தரி. பெற்றோரை பார்க்க சொந்த ஊரான திருநெல்வேலிக்கு இவர் சென்றிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 11.௦௦ மணிக்கு வேலை முடித்து வீட்டுக்கு திரும்பிய புருஷோத்தமன் வரும்போதே சாப்பிட பரோட்டா பார்சல் வாங்கி கொண்டு வந்தார்.
பொட்டலத்தை பிரித்து வைத்து, சாப்பிட்டு கொண்டே, மற்றொரு பக்கம் செல்போனில் மனைவியிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென புருஷோத்தமனுக்கு விக்கல் வந்துவிட்டது. போனில் பேசிய மனைவியோ, தண்ணி குடிங்க என்று சொன்னார்.
ஆனால் இந்த பக்கத்தில் இருந்து சத்தத்தையே காணோம். பதறிப் போன சண்முகசுந்தரி, அந்த ஊரில் உள்ள சொந்தக்காரர்களுக்கு போனைப் போட்டு, வீட்டுக்கு போய் என்ன ஆச்சு என்று பார்க்கும்படி கதறியவாறே சொன்னார். இதையடுத்து, விரைந்து வந்த சொந்தக்காரர்களும் உள்பக்கம் பூட்டியிருந்த கதவை உடைத்து கொண்டு சென்று பார்த்தபோது, வாயில் பரோட்டாவுடன் மயங்கி விழுந்து கிடந்தார் புருஷோத்தமன்.
அவசரமாக ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ஓடியபோதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர். பரோட்டோ தொண்டைக்குள் சிக்கி உயிரிழந்திருக்க கூடும் என சந்தேகிக்கப்பட்டாலும், இப்படி ஒரு மரணம் மக்களுக்கு அதிர்ச்சியையே தந்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications