புதுச்சேரி ஏனாமில் நாகப்பாம்பை கழுத்தில் போட்டு விளையாட்டு.. மதுபோதை ஆசாமிக்கு மறக்க முடியாத சம்பவம்
புதுச்சேரி: நல்ல பாம்பு என்று அழைக்கப்படும் நாகப்பாம்பு மிகவும் ஆபத்தானது. ஆனால் நாகம்பாம்பை பற்றி பலருக்கும் தவறான புரிதல்கள் உள்ளது. மூட நம்பிக்கைகளும் அதிக அளவில் உள்ளன. அதேபோல் சில நாகப்பாம்பை மதுபோதையில் தூக்கி விளையாடவும் செய்கிறார்கள். நாகப்பாம்பை பொறுத்தவரை படம் எடுத்து ஆடும். அதனை தங்கள் கழுத்தில் போட்டு சுற்றுவதை சிலர் செய்கிறார்கள். அப்படித்தான் புதுச்சேரி மாநிலத்தின் நிர்வாக பகுதியான ஏனாமில் மதுபோதையில் நல்ல பாம்பை கழுத்தில் போட்டு விளையாடினார்.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தால் சூழப்பட்ட பகுதி ஏனாம்கோதாவரி நதியின் கழிமுகப் பகுதியில், ஆந்திர மாநிலத்தின் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள ஏனாம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் ஒன்று. ஏனாம் புதுச்சேரி நகரத்திலிருந்து சுமார் 820 கி.மீ. வடகிழக்கே அமைந்துள்ளது. ஏனாமில் பாம்பை வைத்து விளையாடிவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏனாம் பிராந்தியத்தில் உள்ள மும்மிடிவரம் மண்டலத்தில் உள்ள பொட்டி டிப்பா கிராமத்தை சேர்ந்த 50 வயதாகும் கொல்லப்பள்ளி கொண்ட என்பவர் கடந்த செப்டம்பர் 9ம் தேதி மதுகுடித்துவிட்டு போதையில் தள்ளாடியபடி தெருவில் நடந்து சென்றுள்ளாராம். அப்போது அந்த வழியாக நல்ல பாம்பு ஒன்று ஊா்ந்து சென்றுள்ளது. இதை பார்த்த கொல்லப்பள்ளி கொண்டா, அதனை பிடித்து கழுத்தில் மாலைபோல் போட்டு விளையாடினாராம். அதை பார்த்த அந்த பகுதி மக்கள் கீழே போடுமாறு எச்சரித்துள்ளனர். ஆனால் அவர் கேட்கவில்லை..
இந்த நிலையில் எதிர்பாராத விதமாக அந்த பாம்பு அவரது கையை கடித்தது. போதையில் இருந்த அவர் அதை அறியவில்லை. போதை அதிகமாக இருந்த நபரை பாம்பு கடித்தத்தை மக்கள் பார்த்துவிட்டனர். எனவே விபரீதத்தை உணர்ந்த ஏனாம் பொதுமக்கள், அவரிடம் இருந்து பாம்பை கீழே தள்ளிவிட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பொதுவாக நாகப்பாம்பு கடித்தால் வலி மிக அதிகமாக இருக்கும். ஏனெனில் நாகப்பாம்பிற்கு கூர்மையான விஷப்பற்கள் நீளமாக இருக்கும். எனவே கடித்தவுடன் தசைகளில் ஆழமாகப் பாய்ந்து வலியை ஏற்படுத்திவிடும். மேலும் நாகப்பாம்பின் விஷம் கடித்த இடத்தில் உடனடியாகக் கடுமையான எரிச்சல், வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்திவிடும்ட. மேலும் விஷம் பரவத் தொடங்கியவுடன் அந்தப் பகுதி சிவந்து வீங்கிவிடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மேலும் வலியுடன் சேர்ந்து, கடித்த இடத்தில் புண்கள் ஏற்படலாம் என்றும் காயம் வழியாக ரத்தம் வெளியேறலாம் என்றும் சிறிது நேரம் கழித்து, மயக்கம், தலைசுற்றல், சுவாசிப்பதில் சிரமம், கண் இமை தொங்குதல் போன்ற நரம்பு மண்டல நஞ்சுக்கான அறிகுறிகளும் தோன்றும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். நாகப்பாம்பு கடித்தால் பாதிக்கப்பட்டவரை தாமதமின்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். அங்கு விஷமுறிவு மருந்து வைத்திருப்பார்கள். உடனே சிகிச்சை தர வேண்டும்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications