புதுச்சேரியில் மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன்!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்ததால் அவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்

புதுச்சேரி முத்திரை பாளையம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி ரதிகலா வயது 45. இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். பாபு பால் வியாபாரம் செய்து வருகின்றார்.

 a Puducherry man who allegedly stoned his wife to death on suspicion of behavior

இந்நிலையில் ரதிகலா நடத்தையில் பாபுக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இதே போல் நேற்று காலையும் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது அப்போது பாபு தன்னுடைய மனைவி ரதிகலா தலையில் கிரைண்டர் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் குறித்து புதுச்சேரி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து காவல் ஆய்வாளர் ஜெயசங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரதிகலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ரதிகலாவை கொலை செய்த அவரது கணவர் பாபுவை கைது செய்த போலிசார் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.. மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கணவர் கொலை செய்த சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+