கொலையில் முடிந்த கேங் வார்.. ரவுடி பாண்டியன் வெட்டி படுகொலை.. புதுச்சேரியில் பரபரப்பு!
புதுச்சேரியில் மாலை நேரத்தில் ரவுடி பாண்டியன் வெட்டி கொலை செய்யப்பட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரியில் மாலை நேரத்தில் ரவுடி பாண்டியன் வெட்டி கொலை செய்யப்பட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியை சேர்ந்தவர் பிரபல ரவுடி பாண்டியன். பல்வேறு கொலை மற்றும் கொள்ளைகளை செய்த பாண்டியனை போலீசார் தேடி வந்தனர்.
புதுச்சேரி போலீஸ் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா போலீசும் இவரை தேடி வந்தது. கடந்த ஒரு வருடமாக இவர் தலை மறைவாக இருந்தார்.

பகை காரணம்
அதேபோல் முன் பகை காரணமாக புதுச்சேரியில் வேறு சில ரவுடி குழுக்களும் பாண்டியனை தேடி வந்தது. இந்த நிலையில்தான் புதுச்சேரியில் மாலை நேரத்தில் ரவுடி பாண்டியன் வெட்டி கொலை செய்யப்பட்டார். தனியாக நடந்து செல்லும் போது இந்த கொலை நடந்துள்ளது.

எத்தனை பேர்
பாண்டியனை பின் தொடர்ந்து வந்த 5 பேர், அவரை சுற்றி வளைத்து, அரிவாளால் வெட்டி இருக்கிறார்கள். சரமாரியாக அரிவாளால் வெட்டி அங்கிருந்து பைக்கில் தப்பித்து சென்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் நேரத்தில் இந்த கொடூர கொலை நடந்துள்ளது.

யார் கொன்றது
இந்த சம்பவத்தால் பாண்டியன் சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து இருக்கிறார்கள். அந்த பகுதியில் இருக்கும் கடைகளில் சில முக்கிய வாக்கு மூலங்களை போலீசார் வாங்கி இருக்கிறார்கள்.

என்ன விசாரணை
அதேபோல் அங்கு ஏதாவது சிசிடிவி கேமரா கிடைக்கிறதா என்றும் சோதனை செய்து வருகிறார்கள். இந்த கொலை, முன்பகை காரணமாக நடந்து இருக்கலாம். வேறு ஏதாவது ஒரு ரவுடி கும்பல் பாண்டியனை கொன்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications