புதுச்சேரியில் குடிநீர் குழாயில் வந்த பயங்கரம்.. அதிர்ந்து போன வீட்டின் உரிமையாளர்.. மக்கள் ஷாக்
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு சுனாமி குடியிருப்பில் ஒரு வீட்டின் குடிநீர் குழாயில் பாம்பு தோல் அடைத்து இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனே பிள்ளைச் சாவடி குடிநீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
குடிநீர் தொட்டிகள அவ்வப்போது முறையாக பராமரிக்க வேண்டும். அப்படி பராமரிக்காவிட்டால் குடிநீர் தொட்டிகள் அசுத்தமாகிவிடும். அசுத்தமான தண்ணீரை குடித்தால் உடலில் பல உபாதைகள் ஏற்படும். குடிநீர் தொட்டிகளில் ஏதேனும் உயிரினங்கள் செத்து மிதந்தால், அந்த குடிநீர் விஷமாகுவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டு மோசமான விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு சுனாமி குடியிருப்பில் சுமார் 1400 வீடுகள் இருக்கினற்ன. இந்த வீடுகளுக்கு 2 குடிநீர் தேக்க தொட்டி வழியாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிள்ளைச்சாவடி பகுதி வீடுகளுக்கு செல்லும் குடிநீர் மிகவும் துர்நாற்றத்துடனும் கலங்கலாகவும் வருவதாக கடந்த சில மாதங்களாக புகார்கள் வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் ஒரு வீட்டில் திடீரென குடிநீர் குழாய் அடைபட்டு தண்ணீர் வரவில்லை. வீட்டின் உரிமையாளர் உடனே அந்த குடிநீர் குழாயை கழற்றி பார்த்தார். அப்போது குடிநீர் குழாயின் உள்ளே பாம்பு தோல் அடைத்துக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதனிடையே குடிநீர் குழாயில் பாம்பு தோல் அடைத்துக் கொண்டிருந்ததை பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் பிரதான குடிநீரை சமையலுக்கு பயன்படுத்துவதை தவிர்த்து வருகிறார்கள்.
உடனடியாக பிள்ளைச் சாவடி குடிநீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அப்பகுதி குடியிருப்பு மக்கள் நகராட்சி மற்றும் சுகாதாரத் துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனிடையே புதுச்சேரி அரசு புதுச்சேரியில் குடிநீர் வினியோகத்தை மேம்படுத்தும் வகையில் மேல்நிலைத் தொட்டிகளை கட்ட திட்டமிட்டுள்ளது. வில்லியனூர் அருகே உருவையாற்றில் உள்ள குளம் அன்பு நகர், மூகாம்பிகை நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அண்மையில் சுமார் ₹1.2 கோடி செலவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications