புதுவைக்கு வந்த பிரான்ஸ் நாட்டுக்காரர்.. கொரோனா அறிகுறியுடன் ஜிப்மரில் அனுமதி!
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வருகின்ற 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி பொதுமக்கள் வெளியே வந்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் முதலமைச்சர் நாராயணசாமி எச்சரித்துளார்.

இதன்காரணமாக புதுச்சேரி எல்லைப் பகுதிகளான கனகசெட்டிகுளம், மதகடிப்பட்டு, முள்ளோடை பகுதிகளில் தமிழக பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படாமல், திருப்பி அனுப்பப்படுகின்றன. மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக வருபவர்கள் மட்டும் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி - தமிழக எல்லையான முள்ளோடை பகுதியில் மருத்துவ குழுவினருடன், போலீசார் இணைந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது கடலுாரில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி மருத்துவ குழுவினர் சோதனை செய்தனர். அதில் காரில் வந்த ஒரு நபருக்கு கொரோனா நோய் அறிகுறி இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் என்பதும், சுற்றுலாவிற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்ததும், தற்போது கும்பகோணத்தில்இருந்து சென்னை செல்வதும் தெரிய வந்தது. இதனையடுத்து, மருத்துவ குழுவினர், அவரையும், அவரது கார் ஓட்டுநரையு தனிமைப் படுத்தி போலீஸ் பாதுகாப்புடன் ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு புனேவில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவுகள் வந்த பிறகே, அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பது தெரிய வரும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications