இது யாரோ சாப்பிட்டு போட்ட எச்சில் பீஸ்?.. கொந்தளித்த யூடியூபர். சர்ச்சையில் இர்ஃபான் உணவகம்
புதுச்சேரி: புதுச்சேரியில் செயல்படும் பிரபல அசைவ உணவகத்தில் தரமற்ற வகையில அசைவ உணவு வழங்கியதாக யூடியூபர் ஒருவர் புகார் கூறி, வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரி வில்லியனூரில் இயங்கி வருகிறது இர்ஃபான் என்ற அசைவ உணவகம். இந்த உணவகம் யூடியூபர்கள் மத்தியில் பிரபலம். இந்த உணவகத்திற்கு யூடியூபர்கள் அதிக அளவில் வந்து ரிவியூ சொல்லி சொல்லி பிரபலப்படுத்திவிட்டார்கள். பார்ப்பவர்களை நாக்கில் எச்சில் ஊரவைக்கும் வகையில் பல்வேறு உணவுகளின் வீடியோக்கள் வெளியானதால் பலரும் இந்த உணவகத்தை நாடி வரத் தொடங்கினர்.
எந்த யூடியூபர்களால் உணவகம் மிகவும் பிரபலம் ஆனதோ, அதே யூடியூபர்களால் சர்ச்சையிலும் சிக்கி உள்ளது. ஒரு யூடியூபர் ரிவியூ செய்வதறகாக வந்தாரோ அல்லது பிடித்த உணவை சாப்பிட வந்தாரோ தெரியவில்லை. அவர் ஆர்டர் செய்த பெப்பர் சிக்கனால் வெடித்தது சர்ச்சை.

பெப்பர் சிக்கன்
யாரோ சாப்பிட்டு போட்ட பீஸை தனக்கு வழங்கி இருப்பதாக கொந்தளித்த யூடியூபர், ரிவியூ வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சர்ச்சையானது. இது தொடர்பாக அந்த யூடியூபர் கூறுகையில், பெப்பர் சிக்கன் ஆர்டர் செய்திருந்தேன். ஆனால் பெப்பர் சிக்கன் சூடே இல்லை. பெப்பர் சிக்கனின் அளவும் மிகக்குறைவாகவே இருந்தது. ஒரு எலும்பு மட்டும்தான் இருந்தது. இது கண்டிபப்க ஒரு பீஸ் போட்டு செய்த பெப்பர் சிக்கன் இல்லை என்பது தெரிந்தது. சரி பரவாயில்லை என்று நினைத்து சாப்பிட ஆரம்பித்தால் அதில் ஒரு பீஸ்கறி எதுவும் இல்லாமல் பிரியாணி சாப்பிட்டவர்கள் போட்டு சென்ற எச்சில் எலும்பு போல் இருந்ததால் கோபம் வந்தது என்று வீடியோவில் யூடியூபர் கூறினார்.

சமாளிப்பு
இதைடுத்து யூடியூபர் கடையின் மாஸ்டரிடம் சென்று பெப்பர் சிக்கன் தயார் செய்யப்பட்ட விதம் குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்திருக்கிறார். அதற்கு மாஸ்டர் தங்கள் கடையில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் முன்கூட்டியே பெப்பர் சிக்கன் தயார் செய்து வைத்து அதை கொடுத்ததாக கூறி சமரசம் செய்துள்ளார். இதை ஏற்காத யூடியூபர், இர்பான் அசைவ உணவக உரிமையாளர் தனக்கு உரிய பதிலை தரவில்லை என்று கூறி யூடியூபர் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதிகாரிகள் ஆய்வு
இதையடுத்து புதுச்சேரி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இர்பான் ரெஸ்டாரண்டிற்கு சென்றார்கள். அங்கு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். சமையல் கூடத்திற்குள் சென்ற அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கிருந்த தாக்காளி சாஸ் பாட்டிலை மட்டும் எடுத்து கீழே போடச் செய்தனர். அதேபோல் அங்கு வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சிக்கனை எடுத்தும் ஆய்வு செய்தனர்.

பொருட்கள் இல்லை
மேலும் பரோட்டாக்களையும் ஆய்வு செய்தனர்.ஆனால் கெட்டுப்போன பொருட்களோ அல்லது காலாவதியான பொருட்களோ எதுவும் இல்லை. கடையில் முழுமையாக சோதித்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அங்கிருந்துபுறப்பட்டு சென்றனர். அசைவ உணவு வீடியோக்களால் பொதுமக்களை வெகுவாக கவர்ந்த உணவகம், ஒரே ஒரு சிக்கன் பீஸ் ஏற்படுத்திய சர்ச்சையால் வாடிக்கையாளர்களை அதிர வைத்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications