Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகைகள் புதிய நாடாளுமன்றம் செல்வதை நடிகரான உதயநிதி விமர்சிக்கிறார்.. தமிழிசை தாக்கு

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: நடிகரான உதயநிதி ஸ்டாலின் புதிய நாடாளுமன்றத்திற்கு நடிகைகள் செல்வதை தவறு என்று விமர்சிக்கிறார் என தெலுங்கானா மற்றும் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்தார்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கி வரும் 22ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்களுக்கு நடைபெற்றது. . இந்த சிறப்புக் கூட்டத் தொடரின் முதல் நாள் நிகழ்வு வழக்கம்போல் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்றது. அப்போது 75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகிர்ந்துகொண்டனர்.

Actor Udhayanidhi Stalin criticizes actresses going to New Parliament: Governor Tamilisai Soundararajan slasm

பின்னர் புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கூட்டத்தொடர் நடைபெற்றது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்குச் சிறப்பு அழைப்பாளர்களாக பாலிவுட் நடிகைகள் கங்கனா ரனாவத், ஈஷா குப்தா உள்ளிட்ட பிரபலங்கள் அழைக்கப்பட்டனர். அழைப்பை ஏற்று வருகை தந்த அவர்களுக்கு அமைச்சர் அனுராக் தாக்கூர் இனிப்பு வழங்கினார். மேலும் கலந்து கொண்ட நடிகைகள் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு அளித்தனர்.

அதேபோல், கடந்த 21 ஆம் தேதி சிறப்பு அழைப்பாளர்களாக நடிகைகள் தமன்னா, திவ்யா தத்தா உள்ளிட்ட நடிகைகள் புதிய நாடாளுமன்றத்திற்கு சென்றனர். புதிய நாடாளுமன்றத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைக்கப்படாதது தொடர்பாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. இதனிடையே, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் புதிய நாடாளுமன்றத்திற்கு ஜனாதிபதி அழைக்கப்படாதது குறித்து விமர்சித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "ஜனாதிபதி திரவுபதி முர்முவை புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவுக்கு அழைக்கவில்லை. ஏன் அழைக்கவில்லை? அவங்க மலைவாழ் மக்கள். அதுமட்டுமல்ல கணவரை இழந்தவர். அதனால் கூப்பிடவில்லை. நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா வருகிறது. அதற்கு இந்தி நடிகை எல்லாம் கூப்பிட்டு போய் இருக்கின்றனர். ஆனால் ஜனாதிபதியை கூப்பிடவில்லை.

ஏன்? கணவரை இழந்தவர் என்ற காரணத்தாலேயே ஜனாதிபதியை நாடாளுமன்றத்துக்கு மத்திய பாஜக அரசு அழைக்கவில்லை. இதுதான் சனாதனம். நாம் பிறப்பால் எல்லோரும் சமம் என்கிறோம். இதை மறுக்கிற சனாதனத்தை ஒழிப்போம் என்பதுதான் நமது குரல். இதற்காக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம்" என்று பேசியிருந்தார். இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சை விமர்சிக்கும் வகையில் தெலுங்கானா மற்றும் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பதாவது:-

சனாதனம் விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டரீதியாக பதில் அளிக்க வேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்தில் பெரும்பான்மையோ சிறுபான்மையோ ஒருவருக்கு ஒரு நம்பிக்கை இருந்தது என்றால், அந்த நம்பிக்கை அவமரியாதை செய்யப்பட கூடாது என்பதும், அவமதிக்கப்பட கூடாது என்பதும் தானே அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளது. அது தானே சரியானது.

ஒரு அமைச்சராக இருப்பவர் அரசியல் அமைப்பு சட்டத்தையும், சட்ட விதிகளையும் மீறி ஒரு குறிப்பிட்ட சதவீத மக்கள் பின்பற்றும் வாழ்க்கை முறையை, ஒழுக்கமான வாழ்க்கை முறையை நீங்கள் ஒழிப்பேன் என்று சொல்வது சரியாக இருக்காது" என்றார். மேலும் அவர் கூறுகையில், நடிகராக இருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு நடிகைகள் செல்வது தவறு என்று கூறுவதா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் திரவுபதி முர்மு குடியரசு தலைவர் ஆகக்கூடாது என்று நினைத்தவர்கள் தான் இன்று அவருக்கு ஆதரவாக பேசுகிறார்கள் என்றும் விமர்சித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+