என் ஆர் காங். பிரமுகரை தாக்கிய புதுவை அதிமுக எம்எல்ஏ தலைமறைவு.. தனிப்படை போலீஸார் வலை
Recommended Video

புதுச்சேரி: அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக சட்டமன்ற கொறடாவுமான வையாபுரி மணிகண்டன் என்.ஆர்காங்கிரஸ் பிரமுகரை தாக்கிய விவகாரத்தில் புதுச்சேரி போலீசார் எம்எல்ஏ மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதால், தலைமறைவான எம்எல்ஏவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி அதிமுக எம்எல்ஏவும், அதிமுக புதுச்சேரி சட்டமன்ற கொறடாவுமான வையாபுரி மணிகண்டன் தனது தொகுதியில் சாலை போடுவதில் கடந்த 13 ஆம் தேதி என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மோதல் ஏற்பட்டது.

இதில் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரை தனது ஆதரவாளர்களுடன் சென்று தாக்கியுள்ளார். இச்சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான சரத் என்பவர் முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இதன்பேரில் தாக்குதல் நடைபெற்ற பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொணடு வந்தனர். இந்நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அசோக், நவீன், தயாளன், தீனா ஆகியோர் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவின் கீழ் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்துள்ளனர்.

வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தலைமறைவாகியுள்ளதால் தலைமறைவான எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் உள்ளிட்ட அவருடைய 4 ஆதரவாளர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications