புதுவையில் தொகுதி பங்கீட்டில் பாஜக-அதிமுக உடன்பாடு; 5 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர் அறிவிப்பு!
புதுவை: அதிமுக, புதுவையில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதிமுக-பாஜக இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டதால் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது.
தமிழகத்தில் ஆளும் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக 20 தொகுதிகளை பெற்றது. தமிழகத்தில் அதிமுக-பாஜக தொகுதி பங்கீட்டில் எந்தவித சிக்கலும் ஏற்படவில்லை.

ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் அதிமுக-பாஜக இடையே தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. .என்.ஆர்.காங்கிரசுடன் கூட்டணியில் உள்ள பாஜக, அதிமுகவுக்கு 3 தொகுதிகளை ஒதுக்க முடிவெடுத்தது. இதனால் ஆத்திரம் அடைந்த புதுவை அதிமுக நிர்வாகிகள் சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் புகார் செய்தனர்.
இந்த நிலையில் அதிமுக-பாஜக இடையே தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக புதுவையில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ள 4 பேருக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது. உப்பளம் தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள அன்பழகன் மீண்டும் போட்டியிடுகிறார்.

இது தொடர்பாக ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
புதுவையில் அதிமுகவின் 5 வேட்பாளர்கள்:-
- உப்பளம்- அன்பழகன்
- உருளையன்பேட்டை - ஓம் சக்தி சேகர்
- காரைக்கால் தெற்கு - அசனா
- முத்தியால்பேட்டை - வையாபுரி மணிகண்டன்
- முதலியார் பேட்டை - பாஸ்கர்
-
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச் -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications